அந்த மாதிரியான படத்தில் நான் நடிக்க மாட்டேன்..! நடிகை கீர்த்தி சுரேஷ் எடுத்த அதிரடி முடிவு

0
795

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது “விஜய் 62” படத்தில் நடித்து வருகிறார். மேலும், சாமி 2 , சண்டகோழி 2 என்று வருசையாக பட வாய்ப்புகளை கையில் வைத்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான “நடிகையர் திலகம்” என்ற படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகி இருந்தது.

Actress keerthi suresh

பழம் பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் சாவித்ரியாகவே வாழ்ந்திருக்கிறார் என்று ரசிகர்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெ . ஜெயலலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகின.ஆனால் இந்த தகவலை முற்றிலுமாக மறுத்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

keerthi-suresh-jayalalitha

ஏற்கனவே “நடிகையர் திலகம்” படத்தில் நடிகை சாவித்ரியின் வேடத்தில் நடிக்க தான் மிகவும் சிரமபட்டதாகவும், அந்த படத்தின் படப்பிடிப்பின் போது தான் அழுதே விட்டதாகவும் நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்திருந்தார். இதனால் தான் இனிமேல் இது போன்ற படங்களில் தான் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார் .