தியேட்டர்ல சரக்கு விக்கலாமே- சர்ச்சையை கிளப்பிய கீர்த்தி சுரேஷ் பட இயக்குனர்.

0
2384
keerthi
- Advertisement -

இந்திய சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் இயக்குனர் நாக் அஸ்வின். இவர் எவடே சுப்ரமணியம் என்ற படத்தைத் தொடர்ந்து தற்போது வரை பல படங்களை இயக்கி உள்ளார். கடந்த ஆண்டு இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவான படம் தான் மகாநடி. பழம் பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எட்டுக்கப்பட்டது. இந்த படத்தில் சாவித்திரி கதாபாத்திரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியிடப்பட்டது.

-விளம்பரம்-

அதோடு இரு மொழி மக்கள் மத்தியிலும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தக் கதாபாத்திரத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் கீர்த்தி சுரேஷ் பெற்றார். இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு நாக் அஸ்வின் அவர்கள் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக உருமாறினார். தற்போது இவர் பாகுபலி ஹீரோ பிரபாஸின் 21 வது படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை பெரும் பொருட்செலவில் எடுக்க இருப்பதாகவும், அதற்காக இந்தப் படத்தின் பிரம்மாண்ட வேலைகள் எல்லாம் கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்று வருகின்றன.

- Advertisement -

இந்நிலையில் இயக்குனர் நாக் அஸ்வின் அவர்கள் திரையரங்குகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக வருவதற்கு ஒரு யோசனையை தனது ட்விட்டரில் தெரிவித்து உள்ளார். தற்போது அது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதில் அவர் கூறி இருப்பது, ஒரு முறை நான் சுரேஷ் பாபு மற்றும் ராணா இருவரிடமும் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது நாங்கள் தியேட்டரில் கூட்டம் அதிகமாகுவது குறித்து பேசி இருந்தோம். வெளிநாடுகளைப் போல தியேட்டர்களில் பீர், மது விற்பதற்கு உரிமம் கொடுக்கப்பட்டால் அது கூட்டத்தை அதிகப்படுத்துமா?? என்ற பேச்சு வந்தது.

அதன் மூலம் திரையரங்கத் தொழிலைக் காப்பாற்ற இயலும். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். இது நல்ல யோசனையா? அல்லது தவறான யோசனையா? என்று கூறி உள்ளார். இவர்கள் யோசனை படி நடந்தால் நாடே ஒரே திண்டாட்டம் தான். பெண்கள் மற்றும் குழந்தைகள் யாரும் தியேட்டருக்கு செல்ல முடியாது. இப்படி இவர் பதிவிட்ட டீவ்ட்க்கு நெட்டிசன்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement