யார் தான் இதையெல்லாம் பரப்புகிறார்கள். கடுப்பான நடிகை கீர்த்தி சுரேஷ்.

0
3496
keerthi
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்தில் முன்னணி நாயகியாக வலம் வந்து கொண்டு இருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகிற்கு அறிமுகமான கீர்த்தி சுரேஷ் தற்போது முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் ‘கீதாஞ்சலி’ படத்தின் மூலம் தான் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் ரஜினிமுருகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தற்போது கீர்த்தி சுரேஷ் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து வருகிறார். மேலும், தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-

தற்போது இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழி படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற பழம்பெரும் நாயகி சாவித்திரி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை “மகாநதி” என்று தெலுங்கில், “நடிகையர்-திலகம்” என்று தமிழில் படமாக எடுத்தார்கள். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் அவர்கள் சாவித்திரி கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

இதையும் பாருங்க : தனது தாயுடன் தனியாக வாழ்ந்து வரும் நடிகை சீதாவின் தற்போதைய நிலை.

- Advertisement -

சமிபத்தில் கீர்த்தி சுரேஷ் அவர்கள் இந்த படத்திற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார். இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள் பாஜக தொழிலதிபரை மணக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தற்போது இந்த நியூஸ் சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை கிளப்பி வருகிறது. இது குறித்து பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் அவர்கள் பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.

keerthi-suresh

-விளம்பரம்-

அதில், கீர்த்தி சுரேஷ் அப்பா பாஜக கட்சியுடன் மிகவும் நெருக்கம் உடையவராக உள்ளார். தற்போது இவர் பாஜக தரப்பில் ஒரு கோடீஸ்வர தொழிலதிபர் கீர்த்தி சுரேஷ்க்கு திருமணம் முடித்துவைக்க முடிவு செய்துவிட்டார். இதற்கு கீர்த்தி சுரேஷும் க்ரீன் சிக்னல் கொடுத்து விட்டாராம். கூடிய விரைவில் கீர்த்தி சுரேஷ் பாஜக தொழிலதிபரை மணந்து கொள்வார் என்பது உறுதியாகிவிட்டது என்று கூறினார்.

இதையும் பாருங்க : எல்லாரும் சோர் இல்லாமல் கஷ்டபடறாங்க,இதான் முக்கியமா ? விளம்பரம் செய்த ஐஸ்வர்யா ராஜேஷ். வீடியோவால் கடுப்பான ரசிகர்கள்.

இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது: இந்த செய்தி எனக்கே வியப்பாக உள்ளது. இது எப்படித் தான் துவங்கியது என்று தெரியவில்லை. யார் தான் இதையெல்லாம் பரப்புகிறார்கள். தற்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் ஐடியா எனக்கு இல்லை என கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அப்போ கீர்த்தி சுரேஷ் இன்னும் கொஞ்ச வருஷம் படத்தில் நடிப்பார் போல.

Advertisement