தென்னிந்திய சினிமா உலகில் குறுகிய காலத்தில் பெரிய நடிகர்களுடன் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக கீர்த்தி சுரேஷ் திகழ்ந்து வருகிறார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.கடந்த 2000ம் ஆண்டு வெளிவந்த பைலட்ஸ் என்ற மலையாள மொழி படத்தின் மூலம் தான் குழந்தை நட்சத்திரமாக கீர்த்தி சுரேஷ் அறிமுகம் ஆகியிருந்தார்.
அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். பிறகு கீர்த்தி சுரேஷ் அவர்கள் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து பல படங்களில் நடித்து இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்து இருக்கிறது. மேலும், பழம்பெரும் நடிகை சாவித்திரி அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சாவித்திரி வேடத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார்.
இந்தப் படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்று இருந்தது. அதோடு இந்த படத்துக்காக கீர்த்தி சுரேஷ்க்கு தேசிய விருது கூட வழங்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து இவர் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் இறுதியாக இவர் நாயகையாக நடித்து வெளிவந்த சாணி காயிதம் படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாரட்டப்பட்டது.
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. அதன் பின் இவர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாமன்னன் என்ற படத்தில் நடித்து இருந்தார். தற்போது கீர்த்தி சுரேஷ் பாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார். தற்போது கீர்த்தி சுரேஷ் ஹிந்தியில் பேபி ஜான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அட்லீ தயாரிக்கிறார்.
வருண் தவான் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதனால் சமீப காலமாக வட இந்தியாவிலேயே செட்டில் ஆகி இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் நாயகனாக நடிக்கும் வருண் தவான் நேற்று தனது 37-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரின் பிறந்தநாளை படக்குழுவினருடன் கேக் வெட்டி கோலாகலமாக கொண்டாடினார்.
இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கீர்த்தி சுரேஷ் படு கிளாமரான உடையில் வந்து இருக்கிறார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவ, பாலிவுட் சென்றதும் நீங்களும் இப்படி மாறிவிடீர்களா என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.