பள்ளி படிக்கும் போதே கில்லியாக இருந்த கீர்த்தி சுரேஷ்.. வைரலாகும் சிறு வயது புகைப்படம்..

0
22652
- Advertisement -

” உன் மேல ஒரு கண்ணு” என்ற பாடலின் மூலம் ஓட்டு மொத்த ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். பொதுவாக தமிழ்நாட்டு பசங்க எப்பவுமே கேரளா பொண்ணுங்க மீது தான் ஒரு கண்ணு என்ற தகவல் உண்டு. அது மட்டும் இல்லாமல் சினிமா துறையிலும் கூட நடித்துக் கொண்டிருக்க நடிகைகளில் முக்கால்வாசிப்பேர் கேரளாவில் இருந்து வந்தவர்கள்தான். நம்ம லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் கேரளாவில் இருந்து வந்தவர்கள் தான். அந்த மாதிரி வந்த நடிகைகள் லிஸ்ட் போட்ட ஒரு புக்கே போடலாம். ஏன்னா, அந்த அளவிற்கு கேரளாவிலிருந்து இந்த நடிக்கிறவங்க தான் நம்ம தமிழ் சினிமா துறையில் இருக்குறாங்க. நம்ம தமிழ் சினிமா எப்போதுமே மலையாள மண்வாசனை நீங்காமல் வீசிக்கொண்டிருக்கும். சினிமா படம் எடுக்கத் தொடங்கிய காலத்திலிருந்து இன்று வரை கேரளாவில் இருந்து தான் பெண்கள் நடித்து வருகின்றனர். அப்படி அந்த வழியில் வந்தவர்தான் நடிகை கீர்த்திசுரேஷ். இவர் ஒரு தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார்.

-விளம்பரம்-

இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும்,இவர் 2000ம் ஆண்டுகளில் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகில் அறிமுகமானார். அதோடு 2013 ஆம் ஆண்டு ‘கீதாஞ்சலி’ என்ற மலையாளத் திரைப்படத்தில் கதாநாயகியாக முதன்முதல் அறிமுகமானார். பின்னர் தமிழில் நடிகர் விக்ரம் பிரபு நடித்த ‘இது என்ன மாயம்’ என்ற படத்தில் அறிமுகமானார். அதுமட்டும் இல்லைங்க சிவகார்த்திகேயன் தளபதி விஜய், சூர்யா, விக்ரம் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் படங்களில் நடித்துள்ளார். எப்பவுமே சினிமா துறைக்கு வரும் நடிகைகள் படிப்படியாக தான் முன்னேறுவார்கள். ஆனா, நம்ம கீர்த்தி சுரேஷ் வந்த சினிமாவுக்கு உடனேயே புகழின் உச்சத்திற்கு சென்று விட்டார். இவர் தமிழில் மட்டும் இல்லைங்க தெலுங்கிலும் தன் நடிப்பின் மூலம் கொடிகட்டி பறக்கிறார்.

- Advertisement -

கீர்த்தி சுரேஷ் தெலுங்கில் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்து உள்ளது என்று கூட சொல்லலாம். தற்போது இவர் பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றுக் கதையில் நடித்து உள்ளார். அதுவும் அந்த படத்தில் சாவித்திரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இது இவருடைய வாழ்க்கையில் நடித்த படங்களிலேயே ஒரு முக்கியமான படம் என்று கூட சொல்லலாம். இந்த படத்தின் மூலம் பல சினிமா பிரபலங்கல் பாராட்டும் வாழ்த்தும் கூறினார்கள். இந்த நிலையில் தற்போது நம்ம கீர்த்தி சுரேஷ் அவர்கள் பாலிவுட்டுக்கும் சென்று நடிக்க உள்ளார் என்ற தகவல் வந்துள்ளது. அது மட்டும் இல்லைங்க நேற்று கீர்த்தி சுரேஷ் அவர்களின் பிறந்த நாள்.

அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு பல பிரபலங்கள் டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தார்கள். அதில் சண்டக்கோழி 2 படத்தின் இயக்குனர் லிங்குசாமி அவர்கள் கீர்த்தி சுரேஷ் தன்னுடன் எடுத்த புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தார். நடிகர் சங்கம் பி ஆர் அவர்களும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். அதோடு ரசிகர்கள் கீர்த்தி சுரேஷ் போஸ்டர் ஒட்டி பயங்கரமாக கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளை கொண்டாடி வந்தார்கள். சினிமா விமர்சகர் ராஜசேகரன், நடிகை திரிஷா, கயல் படத்தின் மூலம் அறிமுகமான தேவராஜ் ,நடிகை வரலட்சுமி சரத்குமார், காமெடி நடிகர் சதீஷ், நடிகை சஞ்சிதா ஷெட்டி, பிகில் படத்தின் பாடலாசிரியர் விவேக் உள்ளிட்ட பல பிரபலங்கள் கீர்த்தி சுரேஷுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்களை ட்விட்டர் பக்கத்தில் கூறியிருந்தார்கள்.

-விளம்பரம்-
Advertisement