Real Vs Real : ஏமாற்றிய பாலிவுட், தற்போது இந்தி மொழியை எதிர்த்து படம் – கீர்த்தி சுரேஷ் அன்றும் இன்றும்

0
679
- Advertisement -

கீர்த்தி சுரேஷின் ரகு தத்தா ட்ரெய்லரை நெட்டிசன்கள் விமர்சித்து வரும் பதிவு தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் குறுகிய காலத்தில் பெரிய நடிகர்களுடன் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக கீர்த்தி சுரேஷ் திகழ்ந்து வருகிறார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

சமீப காலமாகவே இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ரகு தாத்தா. இந்த படத்தை இயக்குனர் சுமன் குமார் எழுதி இயக்கி இருக்கிறார். இவர் ஏற்கனவே தி ஃபேமிலி மேன் என்ற வெப்சீரிசை எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த கே ஜி எஃப், காந்தாரா படங்களை தயாரித்த ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

- Advertisement -

ரகு தாத்தா படம்:

தமிழில் இதுதான் இவர்களுடைய முதல் படம். மேலும், இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவருடன் இந்த படத்தில் எம்.எஸ். பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்த்சாமி, ராஜேஷ் பாலகிருஷ்ணன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசை அமைத்திருக்கிறார். இந்நிலையில் இந்த படத்தினுடைய ட்ரெய்லரை பட குழுவினர் வெளியிட்டு இருக்கிறது.

ரகு தாத்தா ட்ரைலர்:

அந்த ட்ரைலர் முழுக்க இந்தி திணிப்பு விவகாரத்தை தான் பேசப்பட்டிருக்கிறது. ட்ரைலர் ஆரம்பத்தில் பள்ளியில் என்சிசி மாணவர்களிடம் இந்தியில் சொல்லப்படும் வசனத்தை பார்த்து கீர்த்தி சுரேஷ், தமிழில் சொல்லுங்க சார் என்று சொல்கிறார். அதற்கு பிறகு இந்தியை திணிக்காதே, ஹிந்தி எக்ஸாம் எழுதுனா தான் எனக்கு ப்ரமோஷன் கிடைக்குமா? எனக்கு ப்ரமோஷன் வேண்டாம். இந்தி தெரியாது போயா என்று இந்திக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தான் இந்த படம் முழுக்க கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

படம் குறித்த தகவல்:

மேலும், இந்த படத்தின் ரிலீஸ் தேதி தெரியவில்லை. தற்போது இந்த ட்ரைலர் தான் சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் சமீப காலமாகவே தென்னிந்திய நடிகர்கள் பலர் இந்தி வேண்டாம் என்றும், ஹிந்தி திணிப்புக்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தாலும் இந்தி படங்களில் தான் அதிகமாக கவனம் செலுத்தி நடித்து வருகிறார்கள். அந்த வகையில் கூட கீர்த்தி சுரேஷ் ஹிந்தியில் அஜய் தேவ்கான் நடித்த மெய்டன் என்ற படத்தில் கமிட்டாகி இருந்தார்.

நெட்டிசன்கள் விமர்சனம்:

ஆனால், இவர் உடல் எடை குறைத்து மெலிந்து போயிருந்ததால் அந்த படத்தில் இருந்து இவர் விலக்கப்பட்டார். மேலும், ஹிந்தியில் கீர்த்தி சுரேஷ் பேசி இருக்கும் வீடியோவை தற்போது நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் பகிர்ந்து, எதற்கு இந்த உருட்டு? பணத்திற்காகவும் பிரபலத்திற்காகவும் இந்திக்கு எதிராக படங்களில் நடித்துவிட்டு வெளியில் இந்தி பேசிக்கொண்டு, இந்திக்கு ஆதரவாக குரல் கொடுப்பதா? இதெல்லாம் தேவையா? என்றெல்லாம் பங்கமாக கலாய்த்து வருகிறார்கள்.

Advertisement