வளரும் நடிகர்கள் மீது கீர்த்தி சுரேஷ் தந்தை கூறி இருக்கும் குற்றச்சாட்டு தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் ரசிகர்களின் கனவு கன்னியாக கீர்த்தி சுரேஷ் திகழ்ந்து வருகிறார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். 2013 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த கீதாஞ்சலி எனும் திரைப்படத்தின் மூலம் தான் இவர் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார்.

அதனை தொடர்ந்து இவர் இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார். பிறகு கீர்த்தி சுரேஷ் அவர்கள் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து பல படங்களில் நடித்து இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்து இருக்கிறது. மேலும், பழம்பெரும் நடிகை சாவித்திரி அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சாவித்திரி வேடத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார்.

Advertisement

கீர்த்தி சுரேஷ் திரைப்பயணம்:

இந்தப் படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்று இருந்தது. அதோடு இந்த படத்துக்காக கீர்த்தி சுரேஷ்க்கு தேசிய விருது கூட வழங்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து இவர் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த சாணி காயிதம் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார். ராக்கி படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமான அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் சாணி காயிதம். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படங்கள்:

தற்போது இவர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாமன்னன் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தந்தை வளரும் நடிகர்கள் மீது குற்றம் சாட்டி இருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மலையாள திரை உலகில் மிக பிரபலமான தயாரிப்பாளராக இருப்பவர் சுரேஷ்குமார். பொதுவாகவே மலையாள திரை உலகில் தயாரிப்பாளர்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் கீர்த்தி சுரேஷ் தந்தையின் குரல் தான் முதலாக ஒலிக்கும்.

Advertisement

கீர்த்தி சுரேஷ் தந்தை அளித்த பேட்டி:

இந்த நிலையில் மலையாள திரை உலகில் வளர்ந்து வரும் நடிகர்கள் குறித்து சுரேஷ்குமார் கூறியிருந்தது, தற்போது கேரவன் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. ஆரம்பத்தில் ஒரு படத்திற்கு ஒன்னு,இரண்டு கேரவன் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருந்தது. இது முன்னணி நடிகர்களுக்காக பயன்படுத்தபட்டது. ஆனால், தற்போது ஒரு படத்தில் நடித்த ஹீரோ கூட கேரவன் வேண்டுமென்று கேட்கிறார்கள். படப்பிடிப்பு நடக்கும் இடங்களுக்கு கேரவன் செல்ல முடியாமல் சற்று தொலைவில் இருந்தால் கூட அங்கிருந்து இறங்கி நடந்து கூட அவர்கள் செல்வது கிடையாது. எங்கு படப்பிடிப்பு நடக்கிறதோ அதே இடத்திற்கு கேரவன் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதனால் சில நடிகர்கள் லொகேஷனை கூட மாற்ற சொல்லி இருக்கிறார்கள்.

Advertisement

வளரும் நடிகர்கள் குறித்த குற்றச்சாட்டு:

இது குறித்து பல புகார்கள் தயாரிப்பாளர் சங்கத்திற்கு வந்திருக்கிறது. மேலும், ஒரு படத்தில் இரண்டு அல்லது மூன்று வளர்ந்து வரும் ஹீரோக்கள் நடித்தாலும் அவர்களுக்கு ஒரு கேரவனை பகிர்ந்து கொள்ளும் மனப்பான்மை கொஞ்சம் கூட இல்லை. ஆளுக்கு ஒரு கேரவன் வேண்டுமென்று கேட்கிறார்கள். அதோடு ஹோட்டல் ரூமை கூட பகிர்ந்து கொள்ளும் எண்ணம் இல்லை. இப்போது இருக்கும் நடிகர்கள் சினிமாவில் பெரிய நடிகராக வேண்டும் என்ற நோக்கத்தில் நுழைவதில்லை. அர்ப்பணிப்போடு அவர்கள் செய்வதில்லை. தயாரிப்பாளர்களை பற்றி கொஞ்சம் கூட சிந்திப்பதில்லை. இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் பேச கூட்டம் நடத்த இருக்கிறது. அதில் சில முடிவுகள் எடுக்க இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

Advertisement