தென்னிந்திய சினிமா உலகில் ரசிகர்களின் கனவு கன்னியாக கீர்த்தி சுரேஷ் திகழ்ந்து கொண்டிருக்கிறார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்கில் வெளியாகி இருந்த அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார். இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் அவர்கள் ‘வாஷி’ என்ற மலையாள படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கான பூஜை வரும் 17 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான ரேவதி கலாமந்திர் கம்பெனி மூலம் கீர்த்தியின் அக்கா இந்த படத்தை தயாரிக்க இருக்கிறார். மேலும், கீர்த்தி சுரேஷ் குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய சொந்த தயாரிப்பில் நடித்திருந்தாலும் முதல் முறையாக ஹீரோயினாக நடிப்பது இந்த படத்தின் மூலம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தின் இயக்குனர் விஷ்ணு ஆவார். இந்த படத்தின் கதாநாயகன் டொவினோ தாமஸ். இந்நிலையில் கீர்த்தி சுரேஷின் அம்மாவும், நடிகையுமான மேனகா அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் அவர் கீர்த்தி சுரேஷ் பற்றியும், அண்ணாத்த படம் குறித்து கூறியிருப்பது, 40 வருடத்திற்கு முன் நான் ரஜினிக்கு ஜோடியாக நெற்றிக்கண் படத்தில் நடித்திருந்தேன். அன்னைக்கு ஷூட்டிங்கில் எப்படி இருந்தாரோ, அதைவிட இன்னும் அழகாக ஆக்டிவாக ரஜினி இருக்கிறார்.
இதையும் பாருங்க : பாபி சிம்ஹா திருமணம் செய்த ரேஷ்மியா இது ? அவருக்கு இவ்ளோ பெரிய மகன் மற்றும் மகளா. லேட்டஸ்ட் புகைப்படம் இதோ.
அன்னைக்கு பார்த்ததைவிட இன்னிக்கு பயங்கர மாஸாக இருக்கிறார். படத்தில் அவ்வளவு நடிகர்கள் இருந்தும் அவர் 70 வயதைக் கடந்த நிலையிலும் அழகாக தெரிகிறார். படம் ரொம்ப அருமையாக இருக்கிறது. சென்டிமென்ட், ஆக்ஷன் என எல்லாமே சூப்பராக இருக்கிறது. மேலும், படத்தைப் பற்றி பலரும் பலவிதமாக பேசுவார்கள். எந்த படம் வந்தாலும் அதை விமர்சிப்பதற்கு என்றே ஒரு கும்பல் இருக்கிறது.
அதனால் அவர்கள் சொல்வதை எல்லாம் கேட்காமல் மக்களின் விருப்பம் என்னவோ அதை மட்டும் தான் யோசிக்கணும். அதுமட்டுமில்லாமல் விமர்சனத்தை பார்த்துவிட்டு படம் பார்ப்பது மிகவும் தவறான ஒன்று. ரஜினி மகள் வயதில் கீர்த்தி இருந்துகிட்டு தங்கச்சியா நடிக்கலாமா? என்று சிலரிடம் என்னைக் கேட்டார்கள். சினிமா தானே! நிஜத்தில் வயதான ஒருத்தர் குறைந்த வயது மகளை கல்யாணம் செய்தால் குறை சொல்லலாம். இது நடிப்பு, இதில் தேவையில்லாத விஷயங்களை திணிப்பதும், குழப்புவதும் அவசியமற்ற ஒன்று.
ரஜினிக்கு 70 வயது ஆனாலும் ரொம்ப திறமையான, அருமையான நடிகர். அவர் நிஜ வாழ்க்கையில் முடியை கருப்பாக்க காட்டிட்டோ, விக் வைத்து கொண்டோ சீன் போடவில்லை. ரஜினி பொதுவெளியில் எப்படி இருக்கவேண்டுமோ? அப்படி இருக்கிறார். அதே போல் தொழிலுக்கு எப்படி இருக்கணுமோ, அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ற மாதிரி இருக்கிறார். இதில் யாருக்கு என்ன பிரச்சனை? கீர்த்தி அவருக்கு தங்கச்சியா மட்டும் இல்ல, இன்னொரு படத்தில் ஜோடியாக நடிக்க சொன்னாலும் நடிப்பா! ஒருவருடைய திறமையை தான் பார்க்க வேண்டுமே தவிர அவர்களுடைய வயதை ஒப்பிடக் கூடாது என்று விமர்சித்தவற்கு பதிலடி கொடுத்திருக்கிறா