தற்போது உள்ள நவீன காலகட்டத்தில் திருமணத்திற்காக போட்டோ ஷூட் என்ற பெயரில் தம்பதிகள் எந்த அளவிற்கும் செல்கின்றனர். பொதுவாக திருமணம் என்றால் திருமண நாளன்று எடுத்துக்கொள்ளும் போட்டோக்கள் தான் ஒரு பத்து வருடத்திற்கு முன்னர் இருந்த ட்ரெண்டு. ஆனால் தற்போது உள்ள காலகட்டத்தில் திருமணத்துக்கு முன் ஒரு போட்டோ ஷூட் திருமணத்திற்கு பின் ஒரு போட்டோ ஷூட் என்று செய்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தேயிலைத் தோட்டம் ஒன்றில் கணவன் மனைவி நடத்திய போட்டோ ஷூட் போன்று சமூக வலைத்தளத்தில் மிகவும் பேசப்பட்டது

பெரும்பாலும் திருமணத்திற்கு முன்புதான் ஃப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட் நடத்துவார்கள். ஆனால், கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி திருமணம் செய்துகொண்ட,இத்தம்பதி கொரோனா காரணமாக திருமணத்திற்கு முந்தைய ஃப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட்டை செய்துகொள்ள முடியாததால், திருமணத்தை முடித்தப்பிறகு எடுத்துக்கொள்ள திட்டமிட்டார்கள்.;கடந்த வாரம் இடுக்கி மாவட்டத்தின் வாகமனில் தேனிலவைக் கொண்டாடியவர்கள், தங்கள் நண்பர்கள் உதவியுடன்தான் இந்த வைரல் போட்டோஷூட்டை செய்துள்ளனர்.

Advertisement

இந்த போட்டோ ஷூட் சமூக வலைதளத்தில் வைரலாக பரவ இந்த தம்பதிகளை பலரும் விமர்சித்தனர். இதுகுறித்து அந்த தம்பதிகள் அளித்துள்ள பேட்டியில் அந்த கணவர் கூறியுள்ளதாவது, நாங்கள் வித்தியாசமாக ஏதாவது வித்தியாசமாக செய்ய விரும்பினோம். அதனால்தான், இப்படியொரு போட்டோ ஷூட் செய்தோம். ஆனால், நாங்கள் ஆடை அணிந்துகொண்டுதான் போட்டோஷூட் செய்தோம்.நாங்கள் வித்தியாசமாக ஏதாவது வித்தியாசமாக செய்ய விரும்பினோம். அதனால்தான், இப்படியொரு போட்டோ ஷூட் செய்தோம். ஆனால், நாங்கள் ஆடை அணிந்துகொண்டுதான் போட்டோஷூட் செய்தோம் என்று கூறியுள்ளார்.

இது குறித்து அந்த பெண் கூறியுள்ளதாவது, ஆரம்பத்தில் புகைப்படங்களை பகிர்ந்தபோது பலரும் விமர்சித்தார்கள். சில கருத்துகளுக்கு பதில் சொல்ல முடிந்தது. பின்பு விமர்சனங்கள் அதிகமாகவே புறக்கணிக்க முடிவு செய்தோம். ஆனால், எனது தூரத்து உறவினர்களும் பக்கத்துவீட்டுக் காரர்களும் எனது பெற்றோரிடம் இதனையெல்லாம் புகாராக கூறிவிட்டார்கள், நான்கு சுவர்களுக்குள் செய்யவேண்டியதை பொதுவெளியிலா செய்வது?… நீங்கள் கீழே ஆடை அணிந்திருக்கிறீர்களா? என்றெல்லாம் கேட்டார்கள். ஆனால், மக்கள் எல்லோரும் ஒரே மனநிலையில் இருக்க மாட்டார்கள் என்பதை உணர்ந்தார்கள் எனது பெற்றோர். இவர்களின் விமர்சனங்களுக்கு பதிலளித்து என்னுடைய எனர்ஜியை வீணாக்க விரும்பவில்லை

Advertisement
Advertisement