விஜயை சந்தித்த பின் குணமான மகன் – விஜய்யை காண வீட்டை தேடி வந்து காத்திருந்த கேரள தம்பதி

0
237
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். சமீபத்தில் வெளியான நடிகர் விஜயின் ‘கோட்’ படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருக்கிறார். இந்த இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்து இருக்கிறார். இப்படத்தில் மீனாட்சி சௌத்ரி, பிரசாந்த், அஜ்மல், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, யோகி பாபு என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள். மேலும், ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

-விளம்பரம்-

உலகம் முழுவதும் ‘கோட்’ படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை பார்த்து பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் விஜயை நேரில் சந்திக்க கேரளாவை சேர்ந்த மூளை வளர்ச்சி குன்றிய சிறுவன் காத்திருந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கேரளாவை சேர்ந்த ரிஷான் என்ற சிறுவன் பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்ட சிறப்பு குழந்தை. இவர் விஜயின் உடைய தீவிர ரசிகர். திருவனந்தபுரத்தில் கோட் படத்தின் படப்பிடிப்பு நடந்த போதே ரிஷான் விஜயை நேரில் சந்தித்து கட்டிப்பிடித்து உற்சாகம் அடைந்த வீடியோ எல்லாம் இணையத்தில் வைரலாகி இருந்தது.

- Advertisement -

ரிஷான் பெற்றோர் பேட்டி:

அப்போதிலிருந்தே அந்த குழந்தையினுடைய நடவடிக்கையில் நிறைய மாற்றம் ஏற்பட்டதாக பெற்றோர்கள் கூறுகின்றார்கள். இதனால் சமீபத்தில் விஜய்யை நேரில் சந்திக்க என்று மீண்டும் அவர்கள் நீலாங்கரையில் உள்ள விஜயின் வீட்டிற்கு முன்பு 6 மணி நேரமாக காத்திருந்தார்கள். பல மணி நேரம் காத்திருப்புக்கு பிறகு விஜயின் உடைய கார் வீட்டிற்கு வந்தது. நுழைவு வாசலில் இவர்கள் இருந்ததை பார்த்தும் கண்டுக்காமல் விஜயின் உடைய உள்ளே சென்றது. ஏமாற்றத்துடன் ரிஷான் குடும்பத்தினர் திரும்பி விட்டனர். மேலும், இது தொடர்பாக அளித்த பேட்டியில் ரிசான் குடும்பத்தினர், என்னுடைய மகன் விஜய் சார் பாட்டை கேட்டாலே ஆடத் தொடங்கி விடுவான்.

விஜய் குறித்து சொன்னது:

அவனால் ஆட முடியாது இருந்தாலுமே சேரில் உட்கார்ந்து கொண்டே ஆடுவான். இதனால் நிறைய முறை கீழே விழுந்து அடிபட்டு எல்லாம் இருக்கிறது. பலமுறை நாங்கள் தையல் கூட போட்டிருக்கிறோம். நாங்கள் சோசியல் மீடியாவில் எதுவுமே இல்லை. விஜய் சாரை சந்தித்த பிறகு என்னுடைய மகனுடைய வீடியோ இணையத்தில் வைரலாகி இருந்தது. அதை பார்த்து எங்களுக்கு பயங்கர சந்தோசமாக இருந்தது. எப்போதுமே எங்களுடைய மகனின் எதிர்காலம் குறித்த கவலை தான் எங்களுக்கு இருந்தது. எங்களுக்கு பின்னால் அவனை யார் பார்த்துக் கொள்வார் என்ற ஏக்கம் அதிகமாகவே இருக்கிறது.

-விளம்பரம்-

சிறுவன் வீடியோ:

இந்த வீடியோ வெளியான பிறகு நிறைய பேர் என் மகனை பார்க்கிறார்கள். இது எங்களுக்கு ஒருவித சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது. சோசியல் மீடியாவிலும் என் மகனுக்காக ஒரு ஐடியை உருவாக்க சொல்லியும் அவனைப் பற்றி தகவலை போட சொல்லியும் கேட்கிறார்கள். அதனால் இன்ஸ்டா, யூடியூப் இல் எல்லாம் கணக்குகளை தொடங்கி இருக்கி, அவனுடைய அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் அப்டேட் கொடுத்து வருகிறோம். தளபதி விஜய் பாட்டை போட்டாலே அவனால் சும்மாவே இருக்க முடியாது. எழுந்து விடுவான். இதனாலே நாங்க அவனுக்கு சப்போர்ட் பண்ணுகிறோம். இப்ப அவனுக்கு நடனத்தின் மேல் தான் அதிக ஆர்வமே. அது யாரு என்று நாங்கள் கேட்டாலே விஜய் மாமா என்று சத்தம் போட்டு சொல்லுவான்.

சிறுவனின் முன்னேற்றம்:

இத்தனைக்கும் நாங்கள் அவனிடம் எதுவுமே சொல்லியும் கொடுக்கவில்லை. எப்போதுமே விஜய் மாமா படம் பார்க்கணும் என்று சொல்லிக்கொண்டே இருப்பான். வீட்டில் டிவி சேனல் மாற்றும் போது கூட விஜய் சாருடைய முகத்தை பார்த்தால் அதை மாற்றவே விடமாட்டான். கோட் படத்தை முதல் நாள் முதல் காட்சியை பார்த்தோம். எங்களுடைய மகன், அப்பா-அம்மா தவறை யாரையுமே கட்டிப்பிடிக்க மாட்டார்கள். ஆனால், விஜய் சாரை கட்டிப்பிடித்து விட்டு விடவே இல்லை. அதற்குப் பிறகுதான் அவனிடம் நாங்கள் நிறைய மாற்றத்தை பார்த்தோம். விஜய் சாரை பார்க்காமல் இருந்திருந்தால் அவனுடைய வாழ்க்கை படிப்பு, சிகிச்சை என்றே போயிருக்கும். அவனுக்குள் நடன திறமை இருக்கும் என்பதை எங்களுக்கு விஜய் சாரை சந்தித்த பிறகுதான் தெரியும். இப்போது அவனிடம் நிறைய மாற்றங்கள் இருக்கிறது என்று கூறி இருந்தார்கள்.

Advertisement