4 மாதத்திற்கு முன்னர் விபத்தில் நொறுங்கிய கார், தற்போது தரமான காரை வாங்கிய கேஜிஎஃப் நடிகர்.

0
165
avinash
- Advertisement -

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திரையில் வெளியாகி உலகளவில் மெகா ஹிட் அடித்த கேஜிஎஃப் திரைப்படத்தின் வில்லன் நடிகரான பிஎஸ் அவினாஷ் புத்தம் புதிய சொகுசு கார் ஒன்றை வாங்கியிருக்கின்றார் என்ற தகவல் ஷோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது. ஒரு திரைப்படம் வெற்றிக்கு பல காரணங்கள் இருக்கலாம் ஆனால் முக்கியமா காரணமாக கருதப்படுவது கதாநாயகன் மற்றும் வில்லன். அப்படி தன்னுடைய முக பாவத்திலேயே தான் மிக கொடூரமானவன் என்றும், தன்னுடைய உடல் அமைப்பின் மூலம் கதாநாயகனை விட வலிமையானவன் என்றும் காட்டும் அளவிற்க்கு பிஎஸ் அவினாஷ் அவர்களின் நடிப்பு இருந்தது. அது இப்படத்தின் வெற்றிக்கான காரனங்களில் ஓன்று என்று சொல்லலாம்.

-விளம்பரம்-

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவினாஷ், கார் விபத்தில் சிக்கி இருந்தார். பெங்களூருவில் உள்ள வீட்டில் இருந்து உடற்பயிற்சி கூடத்திற்கு தனது பென்ஸ் காரில் சென்று கொண்டிருந்தார். அனில் கும்ப்ளே சர்க்கிள் அருகே வரும்போது எதிரில் வந்த கன்டெய்னர் லாரி, கார் மீது பயங்கரமாக மோதியது.இந்த விபத்தில் காயம் ஏதுமின்றி நடிகர் அவினாஷ் தப்பினார். விரைந்து வந்த போலீஸார் இதுபற்றி வழக்கு பதிவு செய்து, லாரி டிரைவரிடம் விசாரித்தனர்

- Advertisement -

இந்நிலையில் நடிப்பில் கம்பிரமான வில்லனாக நடித்த பிஎஸ் அவினாஷ் தற்போது தற்போது தன்னைப் போலவே பல மடங்கு கம்பிரமான விலையுயர்ந்த கார் ஒன்றை வாங்கியுள்ளார். அது பிஎம்டபிள்யூ நிறுவனத்தை சேர்ந்த சொகுசு கார்களில் ஒன்றான எக்ஸ்5 40ஐ தான். இந்த காரின் ஆரம்ப விலை மட்டும் ரூ96,50,000/- இருக்கும் என கூறப்ப்டுகிறது. ஆனால் இது அந்த காரின் ஆரம்ப விலை மட்டும் தான். பிஎம்டபிள்யூ எக்ஸ்5ல் மொத்தம் நான்கு மாடல்கள் உள்ளன. அதில் X5 40i என்ற காரையே பிஎஸ் அவினாஷ் வாங்க்கியுள்ளார்.

பிஎம்டபிள்யூ நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த சொகுசு காரின் வகைகளில் பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான மோட்டார் வகைகள் உள்ளன. இதில் பெட்ரோல் மோட்டார் வெறும் 5.5 வினாடிகளில் பூஜ்ஜியதிலிருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை செல்லும் வல்லமை கொண்டது. மேலும் இந்தவகையான கார்களின் அதிகபட்ச வேகம் மணிக்கு சுமார் 243கிமீ இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் பயனாளிகளின் வசதிக்கு என்றவாறு 8 ஸ்பீடுகளை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

-விளம்பரம்-

இந்நிலையில் தான் இந்த சொகுசு காரை வாங்கியதாக அவினாஷ் சங்கீதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். தன்னுடைய வில்லத்தனமான நடிப்பு கண் பார்வை மூலம் படம் பார்க்கும் ரசிகர்களை இவர் மிகவும் வலிமையானவர் என்று நினைக்க வைக்கும் கம்பிரத்தை போலவே கம்பிரமாக தோற்றமளிக்கும் கருப்பு நிறமுடைய சொகுசு காரை வாங்க பிஎஸ் அவினாஷ் கருப்பு நிற சட்டை அணிந்து சென்றிருந்தார். இதற்கு அவரின் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த சொகுசு காரில் அடாப்டீவ் 2ஆக்ஸில் ஏர் சஸ்பென்ஷன், எம் ஸ்போர்ட் பிரேக், எக்ஸ்டிரைவ் பாதுகாப்புக்காக சரவுண்ட் வியூவ் கேமிரா, பார்கிங் அசிஸ்டன்ஸ், ஸ்மார்ட்போன், ஹெட்-அப் திரை, ஸ்மார்ட்போன் போன்ற பல வசதிகள் உள்ளதால் தான் இந்த வகையான ஆடம்பர சொகுசு கார்களை அரசியல் பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள், பிரபல விளையாட்டு வீரர்கள் வாங்குவார்கள் அதே போல தான் கேஜிஎஃப் திரைப்பட நடிகரான பிஎஸ் அவினாஷ் அவர்களும் வாங்கியுள்ளார்.

Advertisement