அவரு பா.ஜ.கல இருக்கறதால இப்படியெல்லாம் செய்கிறார்,போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் – KGF விக்கி மீது பெண் பரபரப்பு புகார்.

0
826
KGF
- Advertisement -

கேஜிஎப் துணிக்கடையில் நடந்திருக்கும் அதிரடி சோதனை தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சென்னையில் வண்ணாரப்பேட்டை எம்.சி ரோட்டில் கே ஜி எப் என்ற பெயரில் துணிக்கடை இருக்கிறது. இதை விக்கி என்ற விக்னேஷ் நடத்தி வருகிறார். இங்கு துணி எடுக்கும் வரும் நபர்களை பேசியே தன் பக்கம் கவர்ந்திருக்கிறார் விக்கி. குறிப்பாக, youtube நடத்தும் நபர்களிடம் நையாண்டி, கலாட்டா பேசி தன் கடைக்கு விளம்பரம் செய்திருக்கிறார்.

-விளம்பரம்-

இதனால் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டத்தையும் சேர்த்து வைக்கிறார். சமீபத்தில் இவர் கடையில் உள்ள துணியை உட்காரும் நாற்காலி போல எப்படி பயன்படுத்துவது என்று பேசி வெளியில் இருக்கும் வீடியோ எல்லாம் மிக வைரல் ஆகி இருந்தது. சோசியல் மீடியா முழுவதுமே இவருடைய வசனங்களும் ரில்ஸ்களும் அதிகமாக வைரலாகி கொண்டிருக்கின்றது. இதனால இவர் சீக்கிரமாகவே மக்கள் மத்தியில் பிரபலமானார்.

- Advertisement -

அது மட்டும் இல்லாமல் இவருக்கு சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இந்த நிலையில் விக்கி நடத்தி வரும் கேஜிஎப் துணிக்கடையின் மீது எழுந்திருக்கும் புகார் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதாவது, கே ஜி எஃப் துணிக்கடையில் குழந்தைகளை வேலைக்கு வைத்திருக்கிறார். இது குறித்து குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளுக்கு புகார் அளித்திருக்கிறார்கள். அதன் பேரில் அதிகாரிகள் உடனடியாக ரெய்டில் ஈடுபட்டிருக்கின்றனர்.

பின் அங்கு வேலை செய்த சிறுவர்களை அதிகாரிகள் அந்த இடத்திலிருந்து அழைத்துச் சென்றிருக்கின்றனர். மேலும், அவர்களை சிறுவர்கள் இல்லத்தில் வைத்து உரிமையாளர் விக்கி இடம் விசாரணையும் நடத்தி இருக்கிறார்கள். அப்போது விசாரணையில் விக்கி, தீபாவளி நேரம் கடையின் வியாபாரத்தை தடுக்க தான் இப்படி வேணும் என்று என் மீது புகார் கொடுத்திருப்பதாக கூறியிருக்கிறார். இதனை அடுத்து போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

-விளம்பரம்-

இதை அடுத்து விக்கியின் மீது பெண் ஒருவர் ஆதாரத்துடன் பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர், கூறியிருப்பது, நான் வண்ணாரப்பேட்டையில் துணிக்கடை வைத்திருக்கிறேன். அங்கு கேஜிஎப் என்ற துணி கடையை நடத்தும் விக்கி என்பவர் ரொம்ப அராஜகம் செய்கிறார். இது தொடர்பாக நாங்கள் ஆறு மாதத்திற்கு முன் புகார் கொடுத்தும் போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை. அதேபோல் சிறுவர்களை வேலைக்கு வைக்க கூடாது என்று வருடம் வருடம் அதிகாரிகள் சோதனை நடத்துவது வழக்கம் தான். அவர்கள் சிறுவர்களை அழைத்து சென்றதற்கு நாங்கள் தான் காரணம் என்று எங்களை தொந்தரவு செய்கிறார்.

எங்களுக்கு கொலை மிரட்டல் விடுகிறார். இது அவர் மட்டும் இல்லாமல் அவருடைய அப்பா, அம்மா எல்லோருமே சேர்ந்து தான் கொலை மிரட்டல் விடுகிறார்கள். அங்கு கடையில் வேலை செய்யும் பசங்களை விட்டு மிரட்டுகிறார்கள். நாங்கள் எங்களுடைய வேலையை செய்து கொண்டிருக்கிறோம். விக்கி என்பவர் தான் மோசமாக நடந்து கொள்கிறார். இதற்கெல்லாம் அவர்களுடைய பெற்றோர்கள் உறுதுணையாக இருக்கிறார்கள். போலீஸ் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவன் பா.ஜ.கவில் இருப்பதால் அவன் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்கள்’ என்று அந்த பெண் ஆதாரத்தோடு புகார் அளித்திருக்கிறார்.

Advertisement