கே ஜி எஃப் 2 படத்தின் இசையை பயன்படுத்தியதால் காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் கணக்கை முடக்க நீதிமன்றம் போட்டிருக்கும் உத்தரவு தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.கன்னட சினிமாவின் ராக்கிங் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகர் யாஷ். இவருக்கு பெரும் புகழை ஏற்படுத்தி கொடுத்தது கே ஜி எப் திரைப்படம் தான். இந்த படம் கன்னட சினிமா வரலாற்றிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை செய்தது. இதனை தொடர்ந்து கே ஜி எஃப் 2 படம் வெளியாகி இருந்தது.

இந்தப் படத்தில் கதாநாயகியாக ஸ்ரீநிதி செட்டி நடித்திருக்கிறார். இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்து இருக்கிறார் மற்றும் பவுன் கௌடா ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். மேலும், பல எதிர்பார்ப்புகளுடன் கேஜிஎப் 2 படம் வெளியாகி இருந்தது. படத்தில் கருடனை கொன்று கேஜிஎப்பில் கால் தடம் பதித்து இரண்டாம் கதையை துவக்குகிறார் யாஷ் . ஆனால், அது அங்கிருக்கும் பலருக்கு பிடிக்காமல் போகிறது.

Advertisement

கே ஜி எஃப் 2 கதை:

கேஜிஎப் இடத்தில் இருந்து யாஷை தூக்க வேண்டும் என்று பலரும் திட்டங்களை தீட்டுகின்றனர். இறுதியில் யாஷ் கேஜிஎப் மக்களை காப்பாற்றினாரா? எதிரிகளை துவம்சம் செய்தாரா? மக்களின் நிலைமை என்ன? என்பது தான் படத்தின் மீதி கதை. படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் யாஷ் தனி ஒருவனாக படத்தை தாங்கி சென்றிருக்கிறார். இயக்கம், திரைக்கதை என இரண்டிலுமே பிரசாந்த் நீல் மிரட்டி இருக்கிறார். நீண்ட எதிர்பார்ப்புகளுடன் இருந்த ரசிகர்களுக்கு கே ஜி எஃப் 2 படம் ஒரு சிறந்த விருந்து வைத்தது என்று சொல்லலாம்.

படம் குறித்த விமர்சனம்:

விறுவிறுப்பான கதைகளும், காட்சிகளுக்கு காட்சி பிரம்மாண்டம், அழுத்தமான வசனம், ஆர்ப்பரிக்கும் சண்டைக்காட்சிகள், பிரம்மிக்க வைக்கும் ஆக்ஷன் என படத்திற்கு தேவையான அனைத்தையுமே கொடுத்து ரசிகர்களை ரசிக்க வைத்து இருக்கிறார் இயக்குனர். இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களுடைய முழு ஆதரவையும் கொடுத்து இருந்தார்கள். துமட்டுமில்லாமல் கேஜிஎப் 2 படத்தின் இறுதி காட்சியில் மூன்றாம் பாகம் வரவிருக்கும் என்று காண்பிக்கப்பட்டு இருந்தது.

Advertisement

காங்கிரஸ் கட்சி:

இதனால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு எழுந்து இருக்கிறது. இந்நிலையில் கே ஜி எஃப் 2 படத்தின் இசையை பயன்படுத்தியதால் காங்கிரஸ் கட்சியின் டீவ்ட்டர் கணக்கை முடக்க நீதிமன்றம் போட்டிருக்கும் உத்தரவு தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டு இருக்கிறார். இந்த ஜோடோ யாத்திரை தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கேஜிஎஃப்-2 படத்தின் பாடல்களை பயன்படுத்தி ட்விட்டரில் இரண்டு வீடியோக்களை வெளியிட்டு இருந்தார்.

Advertisement

நீதிமன்றம் போட்ட உத்தரவு:

இதை அடுத்து அனுமதி இல்லாமல் காங்கிரஸ் கட்சியினர் கே ஜி எஃப் 2 படத்தின் பாடல்களை பயன்படுத்தியதாக பெங்களூரு காவல் நிலையத்தில் எம் ஆர் டி மியூசிக் சார்பாக அதன் மேலாளர் நவீன் குமார் புகார் செய்திருந்தார். இதனால் காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் கணக்கை தற்காலிகமாக முடுக்க வேண்டும் என பெங்களூர் நீதிமன்றம் உத்தரவு போட்டிருக்கிறது. தற்போது இந்த தகவல் தான் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisement