கே ஜி எப் படத்தில் அசத்திய வில்லன் தமிழுக்கு வருகிறார்.! அதுவும் இந்த ஹீரோ படத்தில்.!

0
571
Kgf

பாகுபலி உள்ளிட்ட சில தெலுங்கு படங்கள் தமிழிலும் வந்து வரவேற்பை பெற்றன. இந்நிலையில் முதன் முறையாக ஒரு மாபெரும் கன்னட படம் தமிழில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. அது தான் கன்னட நடிகர் யாஷ் நடித்த கே ஜி எப் திரைப்படம்.

Image result for garudan in kgf

இந்த படத்தில் பல்வேறு வில்லன்கள் வந்தாலும், படத்தில் முக்கிய வில்லனாக அனைவரையும் அசத்தியது கருடன் என்ற கதாபாத்திரம் தான். அந்த கதாபாத்திரத்தில் நடித்தவரின் பெயர் ராமச்சந்திர ராஜு. இவர் கன்னடத்தில் பல படங்களில் நடித்துள்ளார்.

- Advertisement -

மேலும், இவர், கன்னடத்தில் ஒரு சில படங்களை தயாரித்தும் உள்ளார். தற்போது இவர் கார்த்திக் நடிக்கும் புதிய படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதிக்கிறார் நடிகர்

தேவ் படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இவர் ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த ‘ரெமோ’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்டூடியோ கிரீன் தயாரிக்கும் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார் ராஷ்மிகா

Advertisement