கே ஜி எஃப் 2 படத்தின் நடிகர் யாஷ் பல வருடங்களுக்கு பிறகு தனது தோற்றத்தை மாற்றி உள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. கன்னட சினிமாவின் ராகிங் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகர் யாஷ். இவர் ‘ஜம்பட ஹுகுடி’ என்ற கன்னட படத்தின் மூலம் தான் சினிமாவிற்கு அறிமுகமானார். அந்த படத்திற்கு பின்னர் இவர் கன்னடத்தில் பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு பெரும் புகழை ஏற்படுத்தி கொடுத்தது கே ஜி எப் திரைப்படம் தான். இது ஐந்து மொழிகளில் டப் செய்யப்பட்டு உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. முதல் பாகம் இந்திய அளவில் பிரம்மாண்ட வரவேற்பை பெற்றிருந்தது. அதுமட்டும் இல்லாமல் முதன் முறையாக ஒரு கன்னட படம் தமிழில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது என்றால் யாஷ் நடித்த “கே ஜி எப்” என்பது குறிப்பிடத்தக்கது .
மேலும், இந்த படம் கன்னட சினிமா வரலாற்றிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை செய்தது. இதனை தொடர்ந்து தற்போது கே ஜி எஃப் 2 படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் கதாநாயகியாக ஸ்ரீநிதி செட்டி நடித்திருக்கிறார். இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கி இருக்கிறார். இவர்களுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.
கே ஜி எஃப் 2 கதை:
இந்த படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார் மற்றும் பவுன் கௌடா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
அதோடு இரண்டாம் பாகம் கொரோனா காரணமாக 2020 இல் இருந்து வெளியீடு தேதி ஒத்தி வைக்கப்பட்டு வந்தது. மேலும், பல எதிர்பார்ப்புகளுடன் நேற்று கேஜிஎப் 2 படம் வெளியாகியுள்ளது. மேலும், நேற்று பத்தாயிரத்துக்கும் அதிகமான ஸ்கிரீன்களில் உலகம் முழுவதும் கே ஜி எஃப் 2 படம் வெளியானது. படத்தில் கருடனைக் கொன்று கேஜிஎப்பில் கால் தடம் பதித்து இரண்டாம் கதையை துவங்குகிறார் யாஷ் . ஆனால், அது அங்கிருக்கும் பலருக்கு பிடிக்காமல் போகிறது.
கே ஜி எஃப் 2 படம் பற்றிய தகவல் :
கேஜிஎப் இடத்தில் இருந்து யாஷை தூக்க வேண்டும் என்று பலரும் திட்டங்களை தீட்டுகின்றனர். இறுதியில் யாஷ் கேஜிஎப் மக்களை காப்பாற்றினாரா? எதிரிகளை துவம்சம் செய்தாரா? மக்களின் நிலைமை என்ன? என்பது தான் படத்தின் மீதி கதை. படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் யாஷ் தனி ஒருவனாக படத்தை தாங்கி சென்றிருக்கிறார். மாஸ் ஹீரோவாக எல்லோர் மனதிலும் நிற்கிறார். இவரது அலட்டல் இல்லாத நடிப்பு படத்திற்கு பக்கபலம் கொடுத்திருக்கிறது. இயக்கம், திரைக்கதை என இரண்டிலுமே பிரசாந்த் நீல் மிரட்டி இருக்கிறார்.
கே ஜி எஃப் 2 படத்தின் சாதனை:
முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் 2 மடங்கு மாசாக உருவாக்கியிருக்கிறார் இயக்குனர். விறுவிறுப்பான கதைகளும், காட்சிகளுக்கு காட்சி பிரம்மாண்டம், அழுத்தமான வசனம், ஆர்ப்பரிக்கும் சண்டைக்காட்சிகள், பிரம்மிக்க வைக்கும் ஆக்ஷன் என படத்திற்கு தேவையான அனைத்தையுமே கொடுத்து ரசிகர்களை ரசிக்கும் வகையில் உருவாக்கி இருக்கிறார் இயக்குனர். நீண்ட எதிர்பார்ப்புகளுடன் இருந்த ரசிகர்களுக்கு கே ஜி எஃப் 2 படம் ஒரு சிறந்த விருந்து வைத்திருக்கிறது என்று சொல்லலாம்.
தாடி முடியை வெட்டிய யாஷ்:
கேஜிஎப் 2 திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் நடிகர் யாஷ் தோற்றம் மாறி உள்ள தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கேஜிஎப் 2வை தொடர்ந்து யாஷ் நடிக்கவிருக்கும் அடுத்த படத்திற்காக தன்னுடைய தோற்றத்தை மாற்றி இருக்கிறார். கேஜிஎப் படத்திற்காக தாடி மற்றும் நீண்ட முடியுடன் ஐந்து ஆண்டுகளாக வலம் வந்தார் யாஷ். தற்போது தன்னுடைய தாடியை எடுத்து செம மாஸ் ஆன லுக்கில் இருக்கிறார். தற்போது அந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலரும் லைக்ஸ்குகளை குவித்து வருகிறார்கள்.