என் அம்மாவை போல் நான் இல்லை என்று கிண்டல் செய்தார்கள். ஸ்ரீதேவி மகள் வேதனை.

0
15153
kushi
- Advertisement -

1980-90 களில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழி படங்களிலும் கொடி கட்டி பறந்தவர் ஸ்ரீதேவி. எம் ஜி ஆர்-சிவாஜி காலம் முதல் தற்போது இருக்கும் இளம் நடிகர்கள் வரை என படங்களில் நடித்தவர். மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஒருவர் ஜான்வி கபூர் மற்றொரு மகள் குஷி கபூர். இளைய மகள் குஷி கபூர் குண்டாக இருந்தார். அதில் அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், மற்றவர்களோ குஷியை குறித்து பல்வேறு விதமாக சமூக வலைத்தளங்களில் விமர்சித்து உள்ளார்கள். மேலும், அவரை ஸ்ரீதேவி மற்றும் ஜான்வி கபூருடன் ஒப்பிட்டு பேசினார்கள்.

அம்மா எவ்வளவு அழகு, அக்கா ஜான்வி செம்ம ஸ்லிம்மாக இருக்கிறார். ஆனால், இந்த குஷியை பார்த்தால் இப்படி இருக்கிறாரே என்று பலர் விமர்சித்தார்கள். அதன் பிறகு குஷி தன் உடல் எடையை விரைவாக குறைத்து ஸ்லிம்மாகிவிட்டார். குஷி ஒல்லியான பிறகு அவரை பார்த்தவர்கள் எல்லோரும் ஸ்ரீதேவி மகள் குஷியா!!! என்று வாய் அடைத்து போனார்கள். பிறகு குஷிக்கும் அம்மா, அக்கா போல் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசை வந்துவிட்டது. இதனால் இவர் அமெரிக்காவில் நடிப்பு தொடர்பாக படித்துக் கொண்டிருக்கிறார்.

- Advertisement -

இந்நிலையில் குஷி பற்றிய வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் குஷி தன்னை பற்றி கூறி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பது, எனக்கு 19 வயது தான் ஆகிறது. நான் ஒன்றுமே செய்யவில்லை என்றாலும் மக்கள் என்னை பாராட்டுவதும், புகழ்வதும் எனக்கு ஆறுதலாக உள்ளது. நான் ரொம்ப கூச்சப்படுபவள். நான் பார்ப்பதற்கு அம்மா, அக்கா ஜான்வி போன்று இல்லை என்று பல பேர் கிண்டல் செய்தார்கள். அந்த கேலி, கிண்டல்களால் நான் சாப்பிடுவது மற்றும் உடை அணியும் முறையை மாற்றி கொண்டேன்.

அப்படி இருந்தும் மக்கள் என்னை விமர்சித்தார்கள். அதனால் நான் மிகவும் பாதிக்கப்பட்டேன் என்று கூறி உள்ளார். இந்த வீடியோவை பார்த்த ஜான்வி கூறி இருப்பது, குஷிக்கு 19 வயது ஆனாலும் அவள் தான் என்னை விட மெச்சூரானவர். பல நேரங்களில் எனக்கு தாய் போல் உள்ளார். லாக்டவுன் நேரத்தில் என் தங்கை உடன் இருப்பது பெரு மகிழ்ச்சியாக உள்ளது என்று ஜான்வி இன்ஸ்டாகிராமில் கூறியுள்ளார். குஷியை மட்டும் அல்ல அதற்கு முன்னதாக ஜான்வியையும் பலரும் விமர்சித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement