சிக்ஸ் பேக்கிற்கு மாறிய ‘நான் ஈ’ வில்லன்.! புகைப்படத்தை பார்த்தா ஷாக்காவீங்க.!

0
1196
Sudeep
- Advertisement -

ராஜமௌலி இயக்கத்தால் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியான ‘நான் ஈ’ படத்தின் மூலம் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் கன்னட நடிகர் சுதீப். தமிழில் இவர் பரிட்சயம் இல்லை என்றாலும் கன்னட திரை துறையில் சூப்பர் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.

-விளம்பரம்-
pailwan

நான் ஈ படத்தை தொடர்ந்து தமிழில் விஜய் நடித்த ‘புலி’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார். அதன் பின்னர் பாகுபலி, முடிஞ்சா இவன புடி ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும், கன்னடத்தில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியையும் இவர் தான் தொகுத்து வழங்கி இருந்தார்.

இதையும் படியுங்க : வடிவேலுவின் மருமகள் இப்படி பட்டவரா.! பெரிய மனசுதான் நம் நேசமணிக்கு.! 

- Advertisement -

இதுவரை பல கன்னட படத்தில் நடித்துள்ள சுதீப் தற்போது ‘பயில்வான்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று பல மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தில் நடிகர் சுதீப் ஒரு குத்து சண்டை வீரராக நடித்துள்ளார்.

இந்த படத்திற்காக தனது உடலை குத்து சண்டை வீரரை போல தயார் செய்துள்ளார் சுதீப். இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் சிக்ஸ் பேக் போஸில் அசத்தலான ஆக்ஷன் ஹீரோவாக இருக்கிறார் சுதீப்.

-விளம்பரம்-
Advertisement