மொத்தமாக வாங்குவதாக சொல்லி படம் போடவே இல்லை என்று கிடா பட இயக்குனர் வேதனையாக கூறி இருக்கும் தகவல் தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் காளி வெங்கட். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. தற்போது காளி வெங்கட் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் கிடா.

இந்த படத்தை ஸ்ரீ ஸ்வரந்தி மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் ரா வெங்கட் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் பூ ராமு ,பாண்டியம்மா, லோகி, கமலி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். ஒரு சிறுவன் தன்னுடைய தாத்தா மற்றும் ஆட்டுக்கு இடையில் இருக்கும் உறவை குறித்தும் சொல்லும் படமாக இருக்கிறது.

Advertisement

கிடா படம்:

மேலும், இந்த படம் நவம்பர் 11ஆம் தேதி தியேட்டரில் வெளியாகி இருக்கிறது. ஆனால், தீபாவளி அன்று ஜப்பான், ஜிகர்தண்டா 2, டைகர் 3, ரைட் தி மார்வெல்ஸ் போன்ற படங்கள் வெளியாகி இருந்ததால் கிடா படத்திற்கு போதுமான தியேட்டர்கள் கிடைக்கவில்லை. அது மட்டும் இல்லாமல் பெரிய அளவில் இந்த படத்திற்காக விளம்பரமும் செய்யவில்லை. சொல்லப்போனால், இந்த படம் வெளியானதே பலருக்கும் தெரியவில்லை.

இயக்குனர் பதிவு :

அதோடு விமர்சனம் பார்த்து இந்த படம் பார்க்கச் சென்றாலும் பெரிய அளவில் டிக்கெட் விற்பனை கூட இல்லை என்று கூறி காட்சியை ரத்து செய்திருக்கிறார்கள். இதனால் படக்குழு மனவேதையில் இருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக கிடா படத்தின் இயக்குனர் ரா வெங்கர் தன்னுடைய facebook பக்கத்தில் ஆதங்கத்துடன் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், இன்று காலை என் நண்பர்கள் இருவர் கிடா படம் பார்க்க காசி டாக்கீஸ் போயிருக்கிறார்கள்.

Advertisement

திரையரங்கம் குறித்து சொன்னது:

கூடவே ஒரு எட்டு பேரும் கிடா டிக்கெட் எடுக்க வந்திருக்கிறார்கள் ஆனால் தியேட்டர் நிர்வாகம் பதினைந்து பேர் இருந்தால் தான் படம் போடுவோம் என்றிருக்கிறார்கள். நண்பர்கள் பரவாயில்லங்க பதினைஞ்சு டிக்கெட் தான நாங்களே இ்ன்னும் அஞ்சு டிக்கெட் எடுக்கிறோம்னு சொல்லியும் படம் போடல. ஷோ கேன்சல், எங்கோ ரிவியூ படிச்சிட்டு படம் பார்க்க வர்றவங்ககிட்ட என்ன பதில் சொல்றதுன்னு எனக்கும் தெரியல..

Advertisement

ஆதங்கத்தில் சொன்னது:

நல்ல படம்னு தேடி வந்தோம்னு சொல்றாங்க. ஆனா, ஷோ கேன்சல், இப்படிலாம் நடக்கும்னு தெரிஞ்சு தான சின்னபடங்கள் வருதுன்னு நீங்க சொல்லவர்றது தெரியுது. ஆனா, ஆதங்கத்த எங்க கொட்டுறது . அதான் இத ஷேர் பண்ணுனேன். மதுரையில ஒரு ஷோ தான் குடுத்தாங்க அங்கயும் இப்ப ஷோ காட்டல. மக்களே உங்களின் அருகே எதோ ஒரு ஷோ கிடா ஓடுச்சுன்னா போய் பாருங்க. கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கும். நன்றி என்று கூறி இருக்கிறார்.

Advertisement