தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எத்தனையோ நிகழ்ச்சிகளை மக்களுக்கு பிடித்தமான வகையில் கொண்டு செல்வதில் தொகுப்பளர்களுக்கும் முக்கிய பங்கு இருக்கிறது. அதிலும் ஆண் தொகுப்பாளர்களை விட பெண் தொகுப்பாளினிகள் தான் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம்பிடித்து விடுகின்றனர். டிடி, பாவனா, ரம்யா என்று இப்படி சொல்லிகொண்டே போகலாம் அந்த வகையில் பெண் தொகுப்பாளிகளின் லிஸ்டில் கிகியும் ஒருவர்.
தொகுப்பாளினி கீர்த்திக்கு அறிமுகம் தேவையில்லை. தமிழ் சேனல்களில் பல வருடங்களாகப் பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியவர். இவர் தொகுத்து வழங்கிய `மானாட மயிலாட’ நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். `ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ்’ நிகழ்ச்சியின் தொகுப்பாளராக, குழந்தைகளின் ஃபேவரைட் அக்காவாக வலம்வந்தார.
இதையும் பாருங்க : அசுரன் மாதிரி இருக்குமா சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ – எழுத்தாளர் ஜெயமோகன் விளக்கம்.
இவர் பிரபல நடன இயக்குனர் கலா மாஸ்டரின் உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் பிரபல நடிகர் பாக்யராஜ் மகன் சாந்தனுவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.திருமணதிற்கு பின்னரும் தனது தொகுப்பாளினி பணியை தொடர்ந்து வருகிறார் கிகி. மேலும், கிகி டான்ஸ் ஸ்கூல் என்று தனியாக நடன பள்ளி ஒன்றையும் வெற்றிகரமாக இயக்கி நடத்தி வருகிறார்.
இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற கிகியிடம் சினிமாவில் நடிப்பது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த கிகி, தனக்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்ததாகவும் ஆனால், அதனை தான் நிராகரித்துவிட்டதாகவும் கூறியுள்ளார். மேலும், தன்னுடைய மாமனார் பாக்கியராஜ் எடுக்கும் எதாவது படத்தில் நடிக்க கூப்பிட்டால் நிச்சயம் அதில் ஹீரோயினாக நடிப்பேன் என்று கூறியுள்ளார் கிகி.