பழங்குடி இளைஞனை கத்தியால் குத்தி இருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சமூக வலைத்தளம் உருவானதிலிருந்து சாதாரண மக்கள் தொடங்கி பிரபலங்கள் வரை என பலரும் அதிலேயே மூழ்கி கிடக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் சமீபகாலமாக சமூக வலைதளங்களின் பயன்பாடு அதிகமாகிக்கொண்டே செல்கிறது. இந்த சமூக வலைத்தளம் மூலம் தான் பல பேருக்கு சின்னத்திரை, வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மேலும், இது பல வகையில் உதவியாக இருந்தாலும் சிலர் இதை தவறான விஷயங்களில் பயன்படுத்தி வருகின்றனர்.

அதுமட்டும் இல்லாமல் பட்டி தொட்டி எங்கும் சோஷியல் மீடியாவினால் பலரும் பிரபலம் ஆக இருக்கிறார்கள். அந்த வகையில் இன்ஸ்டாகிராம் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் கிலி பால். கிலி பாலும், நீமா பாலும் உடன் பிறந்தவர்கள். இவர்கள் கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள டான்சானியா நாட்டைச் சேர்ந்த பழங்குடியினர். இவர்கள் வசிக்கும் பகுதியில் மின் வசதி ஏதும் இருக்காது. இதனால் மின் வசதி இல்லாமல் பலரும் அவஸ்தை படுகிறார்கள். மேலும், இவர்கள் தங்களுடைய கைபேசியை 10 கிலோ மீட்டர் வரை சென்று சார்ஜ் செய்து வருவார்கள்.

Advertisement

கிலி பால் பற்றிய தகவல்:

அதுமட்டும் இல்லாமல் இருவரும் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்திய பாடல்களுக்கு நடனம் ஆடியும், பாடலுக்கு ஏற்ப உதடுகளை அசைத்தும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள். இதனால் இவர்கள் சீக்கிரமாகவே இந்திய மக்களின் மனங்களை வென்று இருக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் இவர்கள் தங்களது பாரம்பரிய உடையணிந்து தான் இந்த வீடியோவை செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இவருக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ளார்கள்

கிலி பாலுக்கு கிடைத்த கௌரவம்:

இதுவே பலரின் கவனத்தை ஈர்த்ததற்கு முக்கியமான காரணம். சமீபத்தில் கூட டான்சானியாவில் உள்ள இந்திய உயரிய ஆணையரினால் கிலி பால் கௌரவிக்கப் பட்டிருந்தார். இதற்கான புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வைரலாகி இருந்தது. இதற்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து இருந்தார்கள். அதனைத் தொடர்ந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் கிலி பால் குறித்து டீவ்ட் போட்டிருந்தார். அதுவும் சோசியல் மீடியாவில் படு வைரலாகி இருந்தது. இந்த நிலையில் கிலி பால் தாக்கப்பட்ட செய்தி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement

மர்ம நபர்கள் கிலி பாலை தாக்கினர்:

கடந்த ஏப்ரல் 30ஆம் தேதியன்று கிலி பால் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னை தாக்கப்பட்டது குறித்து பதிவிட்டிருந்தார். அதில் அவர், “நான் ஐந்து மர்ம நபர்களால் தாக்கப்பட்டேன். அவர்களிடமிருந்து என்னைத் தற்காத்துக் கொள்ளும் போது எனது வலது கையில் கத்தியால் கீறி இருக்கிறது. மேலும், மருத்துவமனையில் எனக்கு ஐந்து தையல்கள் போடப்பட்டு இருக்கிறது. கட்டைகளாலும் அவர்கள் என்னை தாக்கினார்கள். ஆனால், கடவுளுக்கு நன்றி. நான் என்னைக் காத்துக் கொண்டேன்.

Advertisement

கிலி பால் இன்ஸ்ட ஸ்டோரியில கூறியது:

இருவரையும் அடித்த பிறகு அவர்கள் சம்பவ இடத்தில் இருந்து தப்பித்து ஓடினார்கள். நான் காயம் அடைந்து விட்டேன். எனக்காக கடவுளிடம் பிராத்தனை செய்யுங்கள் என்று பதிவிட்டிருந்தார். இப்படி கிலி பால் போட்டு இருக்கும் இன்ஸ்டா ஸ்டோரி சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து பலரும் என்ன ஆச்சு? எதற்காக தாக்கினார்கள்? இப்போது எப்படி இருக்கிறீர்கள் ?என்று ரசிகர்கள் பலரும் நலம் விசாரித்து வருகிறார்கள். ஆனால், இவர்களை தாக்கியதற்கு பின்னணி என்ன? என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.

Advertisement