என்னது, 46,000 ரூபாய்க்குச் சாப்பாடா ? வைரலாகும் ஹாலிவுட் நடிகை கிம் கர்தாஷியன் சாப்பிட்ட பில்.

0
232
- Advertisement -

ஹாலிவுட் பிரபலமான கிம் கர்தாஷியன் எப்போதும் தனக்கு என தனி ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டவர். பேஷன், மாடல் மற்றும் ரியாலிட்டி ஷோவின் நட்சத்திரம் என வலம்வரும் கிம் கர்தாஷியனின் வாழ்க்கை வானத்தில் மிதந்து கொன்டிருக்கும் மிகவும் ஹை-கிளாசான ஒன்று என்று அனைவருக்கு தெரிந்த விஷயமே. சமீபத்தில் அவர் பயன்படுத்தும் ஆடைகள், மிக விலை உயர்ந்த மெர்லின் மன்றோவின் பிரத்யேக ஆடை மற்றும் அவரின் உடல் இன்சூரன்ஸ் 100 மில்லியன் டாலர் என்னும் செய்திகள் அனைத்தும் அவரது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தின.

-விளம்பரம்-

கிம் கர்தாஷியன் சாப்பிட்ட பில் :-

தற்போது அவர் ஒரு வேளை சாப்பிடும் உணவின் விலை பற்றிய பதிவு மற்றும் பில்லின் புகைபடம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.கிம் கர்தாஷியன் சமீபத்தில் , தனது நீண்டநாள் நெருங்கிய நண்பரான பீட் டேவிட்சனைச் சந்திக்க ஆஸ்திரேலியா சென்றுள்ளார். அங்குப் பிரமாண்ட ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த அவர் காலை உணவைச் சாப்பிட உணவகம் வந்துள்ளார்.

- Advertisement -

அவர் சாப்பிட்ட சாப்பாடு வகைகள் :-

அப்போது அவருக்கு உணவு வழங்கிய வெயிட்டர், கிம் கர்தாஷியன் ஒரு வேளை சாப்பிட்ட உணவின் விலையைக் கண்டு அதிர்ச்சியடைந்து போனர். அதன் பில்லை பகைப்படம் எடுத்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.அந்த பில்லில் குறிப்பிட்டதன்படி கிம் கர்தாஷியன் கேப்ரீஸ் சாலட், புருஷெட்டா, அரஞ்சினி, கலமாரி, பீட்சா, பாஸ்தா, க்னோச்சி மற்றும் லாசக்னா போன்ற உணவு வகைகளை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார்.

இதன் மொத்த விலை 46,000 ரூபாய். பொதுவாக மாடல், டிவி நட்சத்திரம், நடிகைகள் நிறையச் சாப்பிட மாட்டார்கள், சரியான டயட்டைக் கடைப்பிடிப்பார்கள் என்பதே பலரின் எண்ணமாக இருக்கிறது. ஆனால் ரூ. 46,000 ($576) ரூபாய்க்கு கிம் கர்தாஷியன் சாப்பிட்டது நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

-விளம்பரம்-
Advertisement