விழிப்புணர்வு என்ற பெயரில் விஜய் பாடலில் வரும் மோசமான காட்சியை பதிவிட்ட கிரண். கடுப்பான விஜய் ரசிகர்கள்.

0
3711

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பயங்கர அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவினால் மக்களின் நிலைமை மோசமாகிக் கொண்டே போகிறது. கொரோனாவை எதிர்த்து அரசாங்கம், மருத்துவர்கள், காவல்துறை, நர்ஸுகள் என பல பேர் தங்கள் உயிரை பயணம் வைத்து போராடி வருகின்றனர்.தற்போது இந்தியாவில் கொரோனாவினால் 4421 பேர் பாதிக்கப்பட்டும், 114 பேர் பலியாகியும் உள்ளனர். இந்த வைரஸ் பரவலை தடுக்க பிரதமர் மோடி அவர்கள் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

ஊரடங்கு உத்தரவால் போக்குவரத்துக்கு, கடைகள், பொது இடங்கள் என அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. ஊரடங்கு உத்தரவால் படிப்புகள் எல்லாம் ரத்து செய்யப்பட்டதால் பிரபலங்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்குகிறார்கள். மேலும், பல பிரபலங்கள் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு குறித்து தங்களால் முடிந்த வீடியோக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்கள்.

இதையும் பாருங்க : பூச்சி கொள்ளியை மாவு என்று நினைத்து மனைவி செய்த பலகாரம். அநியாயமாக பிரிந்த உயிர். குடும்பத்துக்கே ஏற்றப்பட்ட வினை.

- Advertisement -

அந்த வகையில் நடிகை கிரண் அவர்களும் கொரோனா விழிப்புணர்வு வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். எப்போதும் நடிகை கிரண் அவர்கள் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பார். இவர் அடிக்கடி தன்னுடைய ஹாட் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு ரசிகர்களை குஷி ஆகி கொண்டு வருகிறார்.

View this post on Instagram

Keep your hands clean #handwashchallenge #funnyshit

A post shared by Keira Rathore (@kiran_rathore_official) on

இந்நிலையில் தற்போது அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் திருமலை படத்தில் தளபதி விஜயுடன் வாடியம்மா ஜக்கம்மா என்ற பாடலுக்கு நடிகை கிரண் நடனமாடி இருந்தார். அந்த பாடலில் இருந்து ஒரு காட்சியை மட்டும் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ‘யாரையும் தொடாதீர்கள், சமூக இடைவெளியை மேற்கொள்ளுங்கள்’ என்று கூறி உள்ளார்.

இதையும் பாருங்க : இந்த பிரபல நடிகைகள் யாருனு தெரியுதா ? ரெண்டு பெரும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியா நடிச்சவங்க தான்.

-விளம்பரம்-

தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமான நடிகையாக இருந்தவர் கிரண் ரத்தோட். இவர் 2001 ஆம் ஆண்டு சியான் விக்ரம் நடிப்பில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட்டான ஜெமினி படத்தில் கதாநாயகியாக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் வில்லன், அன்பே சிவம், வின்னர் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.

கடைசியாக தமிழில் இவர் சுந்தர்.சி நடிப்பில் வெளிவந்த முத்தின கத்திரிக்காய் என்ற படத்தில் நடித்திருந்தார். அதற்கு பிறகு இவர் சினிமாவில் இருந்து கொஞ்சம் பிரேக் எடுத்து கொண்டார். தற்போது சந்தானம் நடித்து உள்ள சர்வர் சுந்தரம் என்ற படத்தில் நடிகை கிரண் நடித்து உள்ளார். அதன் பின்னர் ஒரு சில இந்தி படங்களில் கவர்ச்சியான தோற்றத்தில் நடித்து வருகிறார்.

Advertisement