வேல வெட்டி இல்லயா ? எனக்கு வந்து கார் ஓட்றீங்களேனு கேட்ட. நான் தான் மலேசியா கலெக்டர்னு சொன்னாரு – எல்லா கிருப கிருப.

0
2467
kiruba
- Advertisement -

சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது ஏதாவது ஒரு விஷயம் ட்ரெண்டில் வந்துவிடுகிறது. அதுவும் மீம் கிரியேட்டர்கள் செய்யும் சேட்டைகளால் சம்பந்தமே இல்லாமல் பல்வேறு விஷயங்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டிங்கில் வந்திருக்கிறது. கடந்த ஆண்டு பிரே பார் நேசமணி என்ற ஹேஷ் டேக் துவங்கி சமீபத்தில் சென்ற சமுத்திரகனி மீம்ஸ் ட்விட்டரில் அடிக்கடி ஏதாவது ஒரு விஷயம் வைரல் ஆகி விடுகிறது. அந்த வகையில் ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என அனைத்து சமூக வலைதளத்திலும் கடந்த மூன்று தினங்களாக ட்ரெண்டிங்கில் இருப்பது கிருப கிருப என்ற விஷயம்தான். 2014 ஆம் ஆண்டு யூடியூபில் வெளியான இந்த வீடியோ தற்போது ஏன் திடீரென்று ட்ரெண்டிங்கில் வந்தது என்பது மிகப் பெரிய புதிராக இருந்து வருகிறது.

-விளம்பரம்-

கிரிக்கெட் சினிமா அரசியல் என்று பல்வேறு பிரபலங்களை வைத்து இந்த கிருப கிருப மீம்கள் தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. அவ்வளவு ஏன் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணி ஜெயித்தது கூட இந்த கிருப கிருப மீமைப் போட்டு கலாய்த்து தள்ளி இருந்தார்கள். இப்படி ஒரு நிலையில் இந்த பாடலை உருவாக்கிய டார்வின் எபினேசர் என்பவர் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் இந்த பாடல் உருவான விதம் குறித்தும் இந்தப் பாடலால் நேர்ந்த அதிசயம் ஒன்றை குறித்தும் கூறியிருக்கிறார்.

- Advertisement -

அந்தப் பேட்டியில் பேசியுள்ள அவர் தான் மிகவும் கூச்ச சுபாவம் கொண்ட நபர் என்றும் ஆனால் ஆறு வருடத்திற்கு பின்னர் தனது பாடலுக்கு இப்படி ஒரு வரவேற்பு கிடைத்ததை எண்ணி மிகவும் மகிழ்ச்சி அடைவதாக கூறி இருந்தார். மேலும் பேசிய அவர் ஒருமுறை மாருதி வேனில் நான் சென்று கொண்டிருந்தபோது ஒரு லாரி எங்கள் மீது மோதியது அந்த விபத்தில் எனக்கு உடம்பில் ஐந்து எலும்பு முறிவுகள் ஏற்பட்டது மருத்துவர்கள் கூட இதிலிருந்து நான் மீண்டு வர மாட்டேன் என்று சொன்னார்கள். ஆனால் அனைவரின் பிரார்த்தனைகளால் நான் அந்த வலியிலிருந்து மீண்டு வந்தேன். அதன் பின்னர்தான் இந்த பாடலை உருவாக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது.

இந்த பாடல் உலகில் உள்ள கிறிஸ்துவ மக்களிடம் மட்டும்தான் சேரும் என்று நினைத்தேன் ஆனால் இப்போது இவ்வளவு வைரலாக மாறும் என்று நான் நினைக்கவில்லை. என்றும் கூறி இருந்தார் இப்படி ஒரு நிலையில் டார்வின் எபினேசரரின் பிரச்சார வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் மலேசியா கலெக்டர் தனக்கு கார் ஒட்டியதாக கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement