கிழக்கு சீமையிலே, பசும்பொன் போன்ற படங்களில் நடித்த விக்னேஷை நியாபகம் இருக்கா ? என்னா மாதிரி நடிகர்.

0
1150
vignesh
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகராக இருந்தவர் நடிகர் விக்னேஷ். இவர் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த சின்னத்தாயி என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். மேலும், சினிமாவில் வாய்ப்புகள் குறையத் தொடங்கிய உடன் இவர் படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் விக்னேஷ் அவர்கள் தன்னுடைய முதல் பட வாய்ப்பு குறித்தும், அதனால் ஏற்பட்ட மனவேதனை குறித்தும் பேட்டியில் பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, வாழ்க்கையில் எதிர் நீச்சல் போட்டால் மட்டும் தான் வெற்றி பெற முடியும். தோல்வியைப் பார்த்து பயப்பட கூடாது.

-விளம்பரம்-

நானும் ஆரம்பத்தில் நடிக்கும்போது நிறைய தோல்விகள், அவமானங்களை சந்தித்தேன். இதனால் நான் ரொம்ப மனமுடைந்து போய் விட்டேன். ஒரு காலத்தில் வந்த தோல்விகளை பார்த்து பயப்பட கூடாது என்று எதிர்நீச்சல் போட வேண்டும் என்று நினைத்து போராட ஆரம்பித்தேன். பெருசாக சாதிக்கவில்லை என்றாலும் நான் திருப்தியாக சந்தோசமாக இருக்கிறேன். பள்ளிபருவம் படிக்கும்போது நான் நிறைய நாடகங்கள் நடிப்பேன். அப்ப எல்லோரும் பார்த்து நீ நல்லா நடிக்கிறாய் என்று பாராட்டுவார்கள். அப்போது தான் எனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் தோன்றியது.

- Advertisement -

பின் சிவாஜி சாரோட வீட்டு அட்ரஸ் எடுத்து வைத்துக் கொண்டுதான் நான் சென்னைக்கு வந்தேன். அப்போது எனக்கு பதினாறு வயசு. வெறும் 300 ரூபாய் எடுத்துக் கொண்டு சென்னை வந்தேன். ஆனால், சிவாஜி சார் என்னை பார்க்கவில்லை. பின் சென்னை வந்த அடுத்த நாளே வேலைக்கு சேர்ந்து விட்டேன். மேலும், வேலை செய்து கொண்டே நான் சினிமாவில் வாய்ப்பு தேட ஆரம்பித்தேன். முதன்முதலில் பாலு மகேந்திரன் சார் தான் என்னை வண்ண வண்ண பூக்கள் படத்தில் நடிக்க ஓகே என்று சொன்னார். 4 வருட போராட்டங்களுக்கு பிறகு தான் எனக்கு வண்ண வண்ண பூக்கள் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அர்ச்சனா மேடம் வேற ஒரு நடிகரை போடுங்கள் என்று சொன்னார்.

பின் பாலு மகேந்திரன் சார்க்கும், அர்ச்சனாவிற்கும் பெரிய சண்டை வந்தது. பின் என்னை கன்வைன்ஸ் பண்ணி அடுத்த படம் பண்ணலாம் என்று சொன்னார். இதனால் நான் ரொம்ப அப்செட் ஆகி விட்டேன். அப்ப தற்கொலை செய்து கொள்ளலாம் என்று நான் முடிவு செய்தேன். அந்த அளவுக்கு மன உளைச்சலுக்கு ஆளானேன். அதற்குப் பிறகு தான் கொஞ்சம் கொஞ்சமாக மனதை தேற்றி படங்களில் நடிக்க ஆரம்பித்தேன் என்று கூறியுள்ளார். இப்படி இவர் பேசியிருக்க வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement