கிழக்கு வாசல் சீரியலில் ஏற்பட்ட மாற்றம் – வெளியேறுகிறாரா SAC? பின்னணி என்ன ?

0
2070
- Advertisement -

கிழக்கு வாசல் சீரியலின் டைமிங்கை மாற்றி இருப்பதால் நடிகர்களின் நிலைமை குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் கிழக்கு வாசல் என்ற விஜய் ஒளிபரப்பாகி இருக்கிறது. இந்த சீரியலை ராதிகா சரத்குமாரின் ராடான் நிறுவனம் தயாரிக்கிறது.

-விளம்பரம்-

இந்த கிழக்கு வாசல் சீரியலில் ஹீரோவாக நடிக்க முதலில் சஞ்சீவ் ஒப்பந்தமானார். அதற்காக சீரியலுக்கு போடப்பட்ட பூஜையில் கூட சஞ்சீவ் கலந்து இருந்தார். அதற்கு பின் என்ன நடந்தது என்று தெரியவில்லை. திடீரென்று சீரியலை விட்டு சஞ்சீவ் விலகிவிட்டார். அவருக்கு பதிலாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் வெங்கட் ஹீரோவாக நடித்து வருகிறார். இவர்களுடன் இந்த சீரியலில் ரேஷ்மா, தினேஷ், எஸ்.ஏ சந்திரசேகர், அருண் உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள்.

- Advertisement -

கிழக்கு வாசல் சீரியல்:

மேலும், இந்த சீரியல் நடிகர் விசுவின் நடிப்பில் வெளிவந்த சம்சாரம் அது மின்சாரம் படத்தின் கதையை தழுவி எடுக்கப்பட்டது என்று பலரும் கூறினார்கள். இருந்தாலும், இந்த சீரியல் வெளியானது. மேலும், இந்த தொடர் தொடங்கி சில வாரங்கள் கடந்து இருக்கிறது. இருந்தாலும் இந்த சீரியல் எதிர்பார்த்து அளவிற்கு டிஆர்பி ரேட்டிங் வரவில்லை. இதனால் சில வாரங்களிலேயே இந்த சீரியலுடைய இயக்குனர் மனோஜை மாற்றிவிட்டு தற்போது அவருக்கு பதில் நீராவி பாண்டியன் என்பவர் தொடரை இயக்கிக் கொண்டு வருகிறார்.

சீரியல் குறித்த தகவல்:

இப்படி இருக்கும் நிலையில் திடீரென்று இந்த சீரியலின் டைமிங் மாற்றப்பட்டிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்றும். தற்போது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி அக்டோபர் ஒன்றிலிருந்து தொடங்க இருக்கிறது. இதனால் அந்த நேரங்களில் ஒளிபரப்பாகும் சீரியலின் நேரத்தை மாற்றுகிறார்கள். அந்த வகையில் கிழக்கு வாசல் தொடரின் உடைய நேரமும் தற்போது மாறி இருக்கிறது. இந்த சீரியல் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பி வந்தார்கள்.

-விளம்பரம்-

சீரியல் டைம் மாற்றம்:

இனி மாலை 4 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. இதனால் சீரியல் குழுவே அப்செட் ஆகி இருக்கிறது.
அது மட்டும் இல்லாமல் இந்த சீரியலின் தயாரிப்பு நிறுவனர் ராதிகாவும் கவலையில் இருந்தாராம். ஆனால், அவரால் எந்த ஒரு கருத்தும் தெரிவிக்க முடியவில்லை. இது தொடர்பாக சில இடம் விசாரித்த போது, ரேஷ்மா பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா இருவருமே பிரபலமான சீரியல்களில் இருந்து வந்தவர்கள். தற்போது இந்த டைம் மாற்றத்தால் அவர்கள் இருவருமே மிகவும் கவலையில் இருக்கிறார்கள். இவர்களை அடுத்து நடிகர் தினேஷுக்கு இந்த டைம் மாற்றம் பெரிய அதிர்ச்சியாக இருப்பதாக கூறப்படுகிறது.

நடிகர்கள் நிலைமை:

இவர்களை தொடர்ந்து முதன் முதலாக சீரியலில் நடிக்க வந்த இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகருக்கும் ரொம்ப வருத்தம் என்று கூறப்படுகிறது. அவர், ஏம்பா நாலு மணிக்கு வீட்டில் யாராவது டிவியை உட்கார்ந்து பார்த்துட்டு இருப்பாங்களா என்று மனவேதனையுடன் கேட்டிருக்கிறார். சொல்லப்போனால், அவர் சீரியலை விட்டு வெளியேறி விடுவார் என்றெல்லாம் சிலர் கூறுகிறார்கள். ஆக மொத்தம் இந்த டைம் மாற்றத்தால் சீரியல் தயாரிப்பை விட நடிகர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. வரும் நாட்களில் கிழக்கு வாசல் தொடர் பிக்கப் ஆகுமா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement