கோலமாவு கோகிலா திரைவிமர்சனம்..!

0
376
Kolamavu-kokila
Kolamavu-kokila

தமிழ் சினிமாவின் “Lady Supetstar ” நம்ம நயன்தாரா நடிச்சிருக்க புது படம் தான் “கோ கோ ” அதாவது கோலமாவு கோகிலா இப்போ நம்ம தமிழ் சினிமாவுல கதாநாயகிய மட்டும் வச்சி படம் பண்ணனும்னு நினைக்குற எல்லா டைரக்டர்சோட “First Choice “-னா அது நம்ம நயன்தாரானே சொல்லலாம் . ஏன்னா ஹீரோவுக்கு கிடைக்குற ஓப்பனிங்க்கு சமமா இவங்களோட படம் ஓப்பனிங் இருக்கு இந்த படத்துக்கு முன்னாடியே நயன்தாரா “மாயா “, “அறம் ” மாதிரி கதாநாயகிய மட்டுமே வச்சி எடுத்த படத்துல நடிச்சி Hit அடிச்சிருக்காங்க. இப்போ அதே மாதிரி ஒரு படம் இந்த “கோ கோ ”
kolamaavu-kokila-review

கதைக்களம்:

கதைப்படி நயன்தாரா தான் கோகிலா ஒரு நடுத்தரமான குடும்பம் டெய்லி வேலைக்கு போனதா குடும்பம் நகரும் அப்படி ஒரு நிலைமை அவங்களோட அவங்க அம்மா “சரண்யா” தங்கச்சி “VJ ஜாக்லின் ” திடீர்னு அவங்க அம்மாவுக்கு கேன்சர் வருது அப்போ hospital செலவுக்கு நிறைய பணம் தேவைப்படுது எப்படி சம்பாதிக்க போறேன்னு யோசிக்கும் போது அவங்க போய் ஒரு போதை பொருள் கடத்துற கும்பல் கிட்ட மாட்டிக்குறாங்க. அந்த கும்பலும் நயன்தாரா பாக்குறதுக்கு அப்பாவி மாதிரி இருக்குறதால அவங்கள வச்சே கடத்தல் பன்றாங்க அப்புறம் இந்த விஷயம் பெரிய பிரச்சனைல போய் நிக்குது . இந்த பிரச்சனையா அவங்க எப்படி “Solve” பன்றாங்க அவங்க அம்மாவ எப்படி “கேன்சர் “-ல இருந்து காப்பாத்துறாங்க அதுதான் கதைக்களம் .

கதாபாத்திரங்கள்: நயன்தாரா அம்மாவா எப்பவுமே அம்மா கேரக்டர் பண்ற சரண்யா பண்ணிருக்காங்க அவங்க நடிப்பு பத்தி சொல்ல தேவையில்லை நல்லா பண்ணிருக்காங்க. அவங்க தங்கச்சியா விஜய் TV VJ ஜாக்லின் அவங்களுக்கு இது முதல் படம் அவங்களும் நல்ல நடிச்சிருக்காங்க. நயன்தாராவ “OneSide “-ஆ லவ் பன்ற கேரக்டர் யோகி பாபு அதுக்கு அப்புறம் மொட்டை ராஜேந்திரன் அறந்தாங்கி நிஷா-னு இந்த படத்துல நிறைய சின்ன சின்ன கேரக்டர் நல்ல பண்ணிருக்காங்க.

Kalyana-Vayasu

மற்றபடி இந்த படத்துக்கு மியூசிக் அனிருத் செமயா மியூசிக் பண்ணிருக்காரு. “கல்யாண வயசு தான் வந்துடிச்சி டி ” சாங்-லாம் படம் ரிலீஸ்க்கு முன்னாடியே ஹிட். பின்னணி இசையிலயும் பின்னி இருக்குறாரு “ராக் ஸ்டார் ” அனிருத். டைரக்டர் நெல்சன்-க்கு இது முதல் படம் மதிரியே தெரியல அந்த அளவுக்கு விறுவிறுப்பான கதையை கொஞ்சம் ஸ்லோவா சொல்லி இருக்காரு. இந்த படத்தை “LYCA ” நிறுவனம் தயாரிச்சி இருகாங்க.

படத்தோட சின்ன சின்ன சீன்ஸ் கூட ரசிகர்கள் கிட்ட கைதட்ட வாங்குது. யோகி பாபு Second Half முழுசா நயன்தாரா கூடவே நடிச்சி ஸ்கோர் பண்ணிருக்காரு. மொத்தத்துல நயன்தாரா அவர்கள் அடுத்த தரமான படத்தை குடுத்து இருகாங்க. வித்தியாசமா படம் பாக்கனுன்னு நெனைக்குறவங்க கண்டிப்பா இந்த படம் ஒருமுறை பாக்கலாம்.