சால்ட் அண்ட் பெப்பர் லுக், கொழுக் முழுக் உடல். அடையாளம் தெரியாமல் மாறிப்போன சீரியல் நடிகர் டிங்கு.

0
18035
tinku
- Advertisement -

சின்னத்திரையில் நடித்த எத்தனையோ நடிகர்கள் தற்போது எங்கு இருக்கிறார்கள் ? என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பதே தெரியாமல் போய் விடுகிறது. அதிலும் குறிப்பாக 90ஸ் ரசிகர்கள் பார்த்து ரசித்த பல்வேறு சின்னத்திரை பிரபலங்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை. அந்த வகையில் 90ஸ் ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சியமான நடிகர் டிங்குவும் ஒருவர் தான். நடிகர் டிங்கு தனது சிறு வயது முதலே குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார்.

-விளம்பரம்-
Image

டிங்கு 1978ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். தற்போது 39 வயதாகும் டிங்கு ஜாப்பானில் கல்யாண ராமன் படத்திற்கு முன்னர் அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் நடித்துள்ளார். அதன்பிறகு விஜயகாந்தின் செம்ம ஹிட் படமான வைதேகி காத்திருந்தால் படத்திலும் நடித்திருந்தார். ஆனால் இவருக்கு நல்ல பெயர் எடுத்து கொடுத்தது கமலின் கல்யாணராமன் படம்தான்.

இதையும் பாருங்க : நிறைவேற போகும் தந்தையின் ஆசை. சினேகனுக்கு விரைவில் திருமணம். பெண் யார் தெரியுமா ?

- Advertisement -

அதன் பிறகு படங்களில் நடிக்கவில்லை. மாறாக சின்னத்திரை பக்கம் திரும்பினார். 2004ல் சன் டிவியில் ஒளிபரப்பான மெகா சீரியல் கோலங்கள் நாடகத்தில் நடித்தார். இந்த நாடகத்தில் அர்ஜுன் ஈஸ்வர் என்ற கேரக்டரில் நடித்திருப்பார் டிங்கு.அதன்பிறகு திருமதி செல்வம் சீரியலில் வாசு என்ற கேரக்டரில் நடித்தார். டான்சிலும் திறமை வாய்ந்த இவர் விஜய் டீவியின் ஜோடி நம்பர் 1 சீசன் 2வில் பங்கேற்று டைட்டில் வின்னாரகாவும் ஆனார்.

இதனை சில படங்களுக்கு டான்ஸ் கோரியோகிராப் செத்தார் டிங்கு. அதன் பின்னர் குடும்பத்துடன் அமெரிக்க சென்று செட்டில் ஆகிவிட்டார். அமெரிக்காவில் டிங்கு டான்ஸ் அகாடமி என ஒரு டான்ஸ் கோரியோகிராப் நிறுவனத்தை ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இப்படி ஒரு நிலையில் இவரது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் நரைத்த தாடியுடன் அடையாளம் தெரியாமல் இருக்கிறார் டிங்கு.

-விளம்பரம்-
Advertisement