பொதுவாகவே மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாக சின்னத்திரை சீரியல்கள் விளங்கி வருகிறது. தொலைக்காட்சி என்ற தொடங்கிய காலத்திலிருந்து சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. மேலும், எவ்வளவு சீரியல்கள் ஒளிபரப்பாகி இருந்தாலும் மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்ற சீரியல்கள் என்று சில மட்டுமே தான். அதுவும் 90 காலகட்டத்தில் வெளிவந்த சீரியல்கள் எல்லாம் இன்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது. அதிலும் சீரியல் என்றாலே முதலில் அனைவருக்கும் ஞாபகம் வருவது சன் டிவி தான். அந்தளவிற்கு சன் டிவி சீரியல்கள் மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. வெள்ளித்திரையில் பிரபலமான நடிகைகள் பலர் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சீரியலில் ஜொலித்து இருக்கிறார்கள்.
கோலங்கள் தேவயானி, தங்கம் ரம்யா கிருஷ்ணன், சித்தி ராதிகா என்று பல முன்னணி நடிகைகள் சீரியலில் நடித்து இருக்கிறார்கள். மேலும், இந்த அளவிற்கு சீரியல்கள் மக்கள் மத்தியில் பிரபலம் ஆவதற்கு காரணம் சீரியல் இயக்கும் இயக்குனர்கள். அந்த வகையில் சின்னத்திரை சீரியல் இயக்குனர்களில் மிகவும் பிரபலமான இயக்குனராக திகழ்பவர் திருச்செல்வம். இவர் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் ஆரம்பத்தில் டப்பிங் தியேட்டரிலும், இளையராஜா மியூசிக் கம்போஸ் செய்யும் ஒலிப்பதிவு கூடத்திலும் பணிபுரிந்து வந்தார். பின் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என்று பல மொழிகளில் தயாரான நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் சவுண்ட் என்ஜினியராக பணியாற்றியவர்.
திருச்செல்வம் சின்னத்திரை பயணம்:
அதற்குப்பிறகு தான் சின்னத்திரையில் சீரியல்களை இயக்கும் பணியில் இறங்கினார். இவர் முதன்முதலாக 2002ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த மெட்டி ஒலி சீரியலில் இணை இயக்குனராக பணியாற்றினார். அந்த தொடரின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். அதற்கு பிறகு கோலங்கள் என்ற தொடரை இயக்கி சின்னத்திரை இயக்குனராக மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். இந்த தொடர் மிக பெரிய அளவில் ஹிட் கொடுத்தது. அதோடு இந்த தொடருக்காக பல விருதுகள் வாங்கி இருக்கிறார் திருச்செல்வம்.
திருச்செல்வம் இயக்கிய சீரியல்கள்:
இதனை தொடர்ந்து அல்லி ராஜ்ஜியம், மாதவி, பொக்கிஷம், சித்திரம் பேசுதடி, கைராசி குடும்பம் போன்ற பல சூப்பர் ஹிட் சீரியல்களை திருச்செல்வம் இயக்கி இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவர் இயக்கிய அதே சீரியலில் நடித்தும் இருக்கிறார். மேலும், திருச்செல்வம் சீரியல் என்றால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெறும். அந்த அளவிற்கு அவருடைய சீரியல்கள் இல்லத்தரசிகளின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது. அதற்கு காரணம் இவர் இயக்கும் சீரியல் பெரும்பாலும் பெண்களின் வாழ்வை மையமாகக் கொண்ட கதைகளாக அமைந்திருக்கும்.
திருச்செல்வம் இயக்கும் புது சீரியல்:
இந்நிலையில் இவர் மீண்டும் தன்னுடைய சீரியல் அத்தியாயத்தை தொடங்க உள்ளார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இவர் சன் டிவியில் எதிர்நீச்சல் என்ற சீரியலை இயக்கியுள்ளார். இதுகுறித்து சன் டிவி தொடர் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து இருக்கிறது. அதில், இது ஜனனி எதிர்நீச்சல் பிப்ரவரி 7 முதல் இரவு 9 மணிக்கு என்பதை குறிப்பிட்டு இருக்கிறார்கள். இந்த சீரியலின் கதை களமும் வித்தியாசமாக இருக்கிறது.
எதிர்நிச்சல் சீரியல்:
ப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தை மையமாகக் கொண்டதாக எதிர்நீச்சல் உள்ளது. சில தினங்களுக்கு முன்பு தான் இந்த தொடரின் ப்ரோ சன் டிவியில் ஒளிபரப்பாகி மக்களின் கவனத்தை ஈர்த்தது. இதில் அஜித்தின் வரலாறு படத்தில் நாயகியாக நடித்த கனிகாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். மேலும், சூப்பர் ஹிட் தொடர்களை கொடுத்த இயக்குனர் திருச்செல்வம் மீண்டும் ஒரு புதிய தொடரை இயக்க உள்ளார் என்ற செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமில்லாமல் சீரியல் எப்படி இருக்கப் போகிறது? இதில் இயக்குனர் திருச்செல்வம் நடிக்கிறாரா? என்று பல எதிர்பார்ப்புகளுடன் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.