இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சபரி மற்றும் சரவணன் இருவரின் இயக்கத்தில் இன்று வெளியாகியிருக்கும் படம் கூகுள் குட்டப்பா. இந்தப் படத்தில் தர்ஷன், லாஸ்லியா, கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, மனோபாலா, மாரியப்பன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். கேஎஸ் ரவிக்குமார் இந்த படத்தை தயாரித்து நடித்து இருக்கிறார். பொதுவாகவே அறிவியல்பூர்வமான திரைப்படங்கள் தமிழில் வருவது அரிது. அப்படியே அந்த படங்கள் வெளிவந்தாலும் மக்கள் மத்தியில் சில படங்கள் மட்டும் தான் வெற்றி பெறுகிறது.

மலையாளத்தில் ரதீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’. இந்த படம் பல பிரிவுகளில் விருதுகள் பெற்று இருந்தது. இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கைப்பற்றி கூகுள் குட்டப்பா என்ற பெயரில் தயாரித்து நடித்திருக்கிறார் கேஎஸ் ரவிக்குமார். படத்தில் சுராஜ் என்ற கதாபாத்திரத்தில் கேஎஸ் ரவிக்குமார், செளபின் கதாபாத்திரத்தில் தர்ஷன், கதாநாயகியாக லாஸ்லியா நடித்து உள்ளார்கள்.

Advertisement

படத்தின் கதை :

கோவை மாவட்டத்தில் தந்தையின் பிள்ளையாக வளரும் ஹீரோ ரோபோட்டிக் எஞ்சினியரிங் படித்து முடித்து விட்டு வெளிநாடு செல்ல ஆசைப்படுகிறான்.ஆனால், அவருடைய தந்தை நேர்மாறானவர். அவர் இயற்கையோடு ஒட்டி வாழப் விரும்புபவர். பின் ஹீரோ தன் தந்தையை சமாதானப்படுத்தி ஜெர்மன் செல்கிறார். மேலும், தனிமையில் இருக்கும் தந்தையை கவனிக்க தனது நிறுவனத்தால் பரிசோதனையில் இருக்கும் ஒரு ரோபோவை அவருக்கு துணையாக தருகிறார்.

ஆரம்பத்தில் தந்தை அந்த ரோபோவை வெறுக்கிறார். பின் தந்தை ரோபோவின் அன்பில் விழுந்து அதையே தன்னுடைய மகனாக பார்த்து வருகிறார். ஒருநாள் பரிசோதனை முடிந்து அந்த ரோபோவை நிறுவன முதலாளி கேட்கிறார்.ஆனால், தந்தை ரோபோவை தர மறுக்கிறார். இதை அறிந்த ஹீரோ மீட்க இந்தியா வருகிறார். இறுதியில் ரோபோ என்ன ஆனது? தந்தை விருப்பப்படி ரோபோ தந்தைக்கே சென்றதா? தன் தந்தையுடன் மகன் இணைந்தாரா? என்பது தான் படத்தின் மீதிக்கதை.

Advertisement

கூகுள் குட்டப்பாவில் வந்த ரோபோ :

தந்தையாக படத்தில் கேஎஸ் ரவிக்குமார் நடித்திருக்கிறார் அவரது மகனாக தர்ஷனும் அவருக்கு காதலியாக லாஸ்லியாவும் நடித்து இருக்கின்றனர். அதே போல இந்த படம் முழுக்க முழுக்க ரோபோவை வைத்தே தான் நகர்கிறது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் ரோபோவாக நடித்த அந்த நபர் யார் என்ற விவரம் கிடைக்கப்பெற்று இருக்கிறது. அது வேறு யாரும் இல்லை நடிகர் இளம் பாரதி தான்.

Advertisement

நடிகர் இளம் பாரதி :

இவரை நீங்கள் பல படங்களில் பார்த்து இருக்கலாம். குறிப்பாக இவர் சந்தானம் நடித்த தில்லுக்கு துட்டு படத்தில் நடித்து இருப்பார். அதுமட்டுமல்லாமல் பல தமிழ் படங்களில் நடித்து இருக்கிறார். சென்னை ஆவடி அருகில் வசித்து வரும் இவருக்கு சமீப காலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் தான் இருந்துள்ளது. மேலும், இவர் தான் கூகுள் குட்டப்பாவில் நடித்தவர் என்று படக்குழு கூட இன்னும் பெரிதாக வெளிக்காட்டவில்லை.

Advertisement