திருப்பாச்சி,சாமி படத்தில் மிரட்டிய வில்லனா இது? தன் இறப்பு செய்தியை கேட்டு மனம் நொந்து அவர் வெளியிட்ட வீடியோ.

0
302
- Advertisement -

தான் இறந்து விட்டதாக வெளியான வதந்திக்கு நடிகர் கோட்டா சீனிவாச ராவ் கொடுத்திருக்கும் விளக்கம் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான வில்லனாக திகழ்ந்தவர் நடிகர் கோட்டா சீனிவாச ராவ். இவர் ஆந்திர பிரதேசத்தை சேர்ந்தவர். இவர் நடிகர் மட்டும் இல்லாமல் பாடகரும் ஆவார். இவர் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த மாசி என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார்.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக, இவரை மக்கள் மத்தியில் பெருமளவு பிரபலம் ஆக்கியது சாமி, திருப்பாச்சி, குத்து, கோ போன்ற திரைப்படங்கள் தான். இந்த படத்தின் மூலம் இவருக்கென்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவானது. அது மட்டும் இல்லாமல் இவர் பெரும்பாலும் படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் தான் மிரட்டி இருந்தார்.

- Advertisement -

இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். மேலும், இவர் என்பது காலகட்டம் தொடங்கி தற்போது வரை படங்களில் நடித்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் இவர் அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவருடைய நடிப்பு எந்த அளவிற்கு பிரபலமோ அதே போல் இவருடைய சிரிப்பும் மக்கள் மத்தியில் பிரபலம் என்று சொல்லலாம் .

கோட்டா சீனிவாச ராவ் இறந்த செய்தி:

இப்படி ஒரு நிலையில் நடிகர் கோட்டா சீனிவாச ராவ் இறந்து விட்டதாக இன்று காலை முதல் செய்திகள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனால் ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலருமே பதறிப் போய்விட்டார்கள். இந்த நிலையில் இதற்கு நடிகர் கோட்டா சீனிவாச ராவ் கொடுத்திருக்கும் விளக்க வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் அவர், அனைவருக்கும் நமஸ்தே. முதலில் பார்வையாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த யுகாதி வாழ்த்துக்கள்.

-விளம்பரம்-

கோட்டா சீனிவாச ராவ் வீடியோ:

நான் இந்த வீடியோ பேசுவதற்கு காரணம் நான் நன்றாக இருக்கிறேன் என்பதை தெளிவுபடுத்துவதற்காகத் தான். நான் இறந்து விட்டதாக தேவையில்லாத சிலர் சமூக வலைத்தளங்களில் வதந்திகளை பரப்பி இருப்பதை அறிந்தேன். இந்த செய்தியை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. உகாதி கொண்டாட்டங்களுக்கு நான் தயாராகிக் கொண்டிருந்தபோது காலை 7.30 மணி அளவில் எனக்கு போன் வர தொடங்கியது. எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர்:

அது மட்டும் இல்லாமல் காவலர்கள் ஒரு வேனில் வந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சுமார் பத்து பேர் இருந்தனர். நான் மூத்த நடிகர் என்பதால் மக்கள் வந்து அஞ்சலி செலுத்த பாதுகாப்பு கொடுக்க என் வீட்டிற்கு வந்திருந்தார்கள். இதே என் இடத்தில் வேறு யாராவது முதியவர் இருந்திருந்தால் அவர் இதயமே வெடித்திருக்கும். புகழ், பணம் வேண்டுமென்றால் அதை சம்பாதிக்க பல வழிகள் உண்டு. அதற்காக இப்படியான வதந்திகளை பரப்புவது முறையல்ல. இதுபோன்ற வதந்திகளுக்கு மக்கள் விழ வேண்டாம். இந்த வீடியோ மூலமாக நான் கேட்டுக்கொள்கிறேன். மக்கள் யாருடைய உயிரோடும் விளையாட கூடாது என்று கூறியிருந்தார்.

Advertisement