விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாலா. இவரை அனைவரும் வெட்டுக்கிளி என்று தான் அழைப்பார்கள். ஆரம்பத்தில் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் காமெடி செய்து வந்த இவர் மற்றவர்கள் கொடுக்கும் கவுண்ட்டருக்கு உடனடியாக பதில் கவுண்ட்டர் கொடுத்து விடுவார். அதற்க்காக இவர் இரவு பகலாக தன்னை தானே தயார் படுத்திக் கொண்டு இருந்தார். அந்த வகையில் இவருக்கு திருப்புமுனையாக இருந்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். அதிலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட KPY பாலா செய்யும் காமெடிக்கு அளவே கிடையாது.

தற்போது இவர் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதோடு இவர் பல்வேறு நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராகவும், விஜே வாகவும் பணியாற்றி வருகிறார். மேலும், பாலா நடிகர் மட்டுமில்லாமல், சமூக அக்கறை கொண்ட நபரும் ஆவார். இவர் தான் சம்பாதித்த பணத்தின் மூலம் தன் பகுதியில் உள்ள சிறியவர்களை படிக்க வைப்பதுடன், ஆதரவற்ற குழந்தைகளை படிக்க வைப்பது, ஆதரவற்ற பெரியோர்களின் மருத்துவ செலவிற்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்தும் வருகிறார்.

Advertisement

இதுவரை மக்களுக்காக தனது சொந்த செலவில் 4 இலவச ஆம்புலன்ஸை வாங்கி கொடுத்து இருக்கிறார் பாலா. அதே போல சமீபத்தில் மிஃஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து இருந்தார். அவரது குடியிருப்பு பகுதியான பல்லாவரம், அனகாபுத்தூர், பம்பல் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்பத்திற்கு தலா 1000 ரூபாய் வீதம் 200 குடும்பங்களுக்கு ரூபாய் 2 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கி இருந்தார்.

இப்படி பல உதவிகளை மக்களுக்கா ஓடோடி செய்து வரும் பாலா, இலவச ஆம்புலன்ஸை தொடர்ந்து இலவச சுத்திகரிப்பு தண்ணீர் வசதியை மக்களுக்காக ஏற்படுத்தி கொடுத்து இருகிறார்.செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள கோட்டை கயப்பாக்கம் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் கடந்த சில வருடங்களாக சுகாதாரமற்ற குடிநீர் அருந்தியதால் பலருக்கு உடல் உபாதைகள் மற்றும் உயிரிழப்புகளும் உள்ளது என இந்த கிராம மக்கள் பல்வேறு உதவிகள் செய்து வருகிறார்.

Advertisement

இப்படி ஒரு நிலையில் நடிகர் KPY பாலா அவர்களிடம் தங்கள் கிராமத்திற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் ஒன்றை அமைத்திருமாறு கோரிக்கை ஒன்றை கடந்த மாதம் டிசம்பர் 17ஆம் தேதி மனுவாக பொதுமக்களின் கையெழுத்துடன் கூடிய மனுவாக கொடுத்தனர் அவர் அந்த மனுவை பெற்றுக் கொண்டு குறுகிய நாட்களில் மூன்று லட்ச ரூபாய் செலவு செய்து இந்த கிராம மக்களுக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைத்துக் கொடுத்தார்.

Advertisement

இதனை இன்று அவர் மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்த அமுதவாணன் ஆகிய இருவரும் இணைந்து திறந்து வைத்தனர் கிராம மக்கள் அனைவரும் நெஞ்சார நன்றியை தெரிவித்தனர். பாலாவின் இந்த செயலை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இப்படி மக்களுக்கு தொடர்ந்து உதவிகளை செய்து வரும் பாலா, ஏழை மக்களுக்கென ஒரு அரசாங்கம் போல செயல்பட்டு வருவது பாராட்டக்குரியது.

Advertisement