மீண்டும் மலை கிராம மக்களுக்கு நடிகர் பாலா இலவச ஆம்புலன்ஸ் வழங்கியிருக்கும் தகவல்கள் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாலா. இவரை அனைவரும் வெட்டுக்கிளி என்று தான் அழைப்பார்கள். ஆரம்பத்தில் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் காமெடி செய்து வந்த இவர் மற்றவர்கள் கொடுக்கும் கவுண்ட்டருக்கு உடனடியாக பதில் கவுண்ட்டர் கொடுத்து விடுவார். அதற்க்காக இவர் இரவு பகலாக தன்னை தானே தயார் படுத்திக் கொண்டு இருந்தார்.

அந்த வகையில் இவருக்கு திருப்புமுனையாக இருந்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். அதிலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட KPY பாலா செய்யும் காமெடிக்கு அளவே கிடையாது. தற்போது இவர் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதோடு இவர் பல்வேறு நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராகவும், விஜே வாகவும் பணியாற்றி வருகிறார். மேலும், பாலா நடிகர் மட்டுமில்லாமல், சமூக அக்கறை கொண்ட நபரும் ஆவார். இவர் தான் சம்பாதித்த பணத்தின் மூலம் தன் பகுதியில் உள்ள சிறியவர்களை படிக்க வைப்பதுடன், ஆதரவற்ற குழந்தைகளை படிக்க வைப்பது, ஆதரவற்ற பெரியோர்களின் மருத்துவ செலவிற்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்தும் வருகிறார்.

Advertisement

சமூக சேவை செய்யும் பாலா:

சமீபத்தில் கூட தன்னுடைய பிறந்த நாளை ஒட்டி முதியோர் இல்லத்திற்கு ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கிக் கொடுத்திருந்தார் பாலா. இது குறித்து பலருமே பாராட்டி இருந்தார்கள். பாலாவின் இந்த நல்ல மனசுக்கு தற்போது சினிமாவில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. பின் இவர் ஈரோடு அருகே உள்ள கடம்பூர் மலைவாழ் மக்களுக்காக இன்னொரு இலவச ஆம்புலன்ஸை வாங்கி தந்திருக்கிறார். இந்த மலைவாழ் பகுதியில் 8000 பேருக்கு மேல் மக்கள் வாழ்கிறார்கள். இந்த இடத்தில் ஆம்புலன்ஸ் வசதி சுத்தமாகவே இல்லை. அது மட்டும் இல்லாமல் பாம்பு கடித்தாலும், ஹார்ட் அட்டாக் வந்தாலும், அவசர சிகிச்சை என்றாலும் உடனடியாக மருத்துவமனைக்கு போக முடியாமல் பல பேர் இறந்து இருக்கிறார்கள்.

பாலா வாங்கி தந்த ஆம்புலன்ஸ்:

இதை அறிந்த பாலா அவர்களுக்கு வாக்குறுதி அளித்து வெளிநாடுகள், உள்ளூரு என்று தொடர்ந்து நிகழ்ச்சிகளை நடத்தி அதன் மூலம் சம்பாதித்த பணத்தை வைத்து இலவசமாக ஆம்புலன்ஸ் வாங்கி தந்திருக்கிறார். இதனை அடுத்து மருத்துவ வசதி இல்லாத மலை கிராமங்களை தேர்வு செய்து ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து தருவதாக நடிகர் பாலா தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த பர்கூர் சோளக்கனை மலை கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று நடிகர் பாலா 5 லட்சம் மதிப்பில் இலவச ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கி தந்திருக்கிறார். இந்த சோளகனை கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது.

Advertisement

சோளகனை மலை கிராமம் குறித்த தகவல்:

இவர்களுக்கு அவசர மருத்துவ தேவை என்றால் 20 km தொலைவு செல்ல வேண்டி இருக்கிறது. இதை அறிந்து தான் நடிகர் பாலா அவர்களுக்கு இலவசமாக ஆம்புலன்ஸ் வழங்கி இருக்கிறார். மேலும், இந்த ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழா மற்றும் 125 குடும்பங்களுக்கு விவசாய உபகரணங்கள் வழங்கும் விழா இன்று சோளகனை மலை கிராமத்தில் நடந்திருக்கிறது. மேலும், இந்த நிகழ்ந்த விழாவில் நடிகர் பாலா மற்றும் மாவட்ட வன அலுவலர் ஆகியோரை வரவேற்க பாரம்பரிய இசை உடன் நடனமாடி மக்கள் வரவேற்று இருந்தார்கள். இந்த விழாவை நடிகர் பாலா தலைமை தாங்கி நடத்திருக்கிறார். உணர்வுகள் அறக்கட்டளை நிறுவன தலைவர் ராஜன், ஈரோடு மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு ஆகியோர் இந்த இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடங்கி வைத்திருக்கிறார்கள்.

Advertisement

பாலா கூறியது:

அதுமட்டுமில்லாமல் தாமரைக்கரை மலை கிராமத்தை சேர்ந்த 125 விவசாயிகளுக்கு மண்வெட்டி, கடப்பாறை, இரும்பு கூடை போன்ற வேளாண் உபகரணங்களை நடிகர் பாலா வழங்கி இருக்கிறார். பின் அவர் விழாவில், மருத்துவ தேவை உதவி தேவைப்படும் கிராமங்களை தேர்வு செய்து தொடர்ந்து என்னுடைய சொந்த முயற்சியில் ஆம்புலன்ஸ் சேவைகளை தொடர்ந்து வழங்குவேன் என்று கூறியிருந்தார். பாலாவின் இந்த நல்ல உள்ளத்தை பார்த்து பலருமே பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement