தமிழ் சினிமா உலகில் காமெடி நடிகராக வலம் வருபவர் பாவா லட்சுமணன். இவர் பெரும்பாலும் வடிவேலு காம்பினேஷனில் நடித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் இவர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.ஆனால், சில ஆண்டுகளாகவே இவர் படங்களில் பெரிதாக நடிப்பதில்லை. தற்போது இவர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்.

அதோடு பொருளாதார நெருக்கடியினாலும் பாவா லக்ஷ்மண் தவித்து வாடிக் கொண்டு வருகிறார். தற்போது இவர் நீரிழிவு நோய்க்காக சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இவர் ஒரு பிரபல சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார். அதில் அவர் தனக்கு சில வருடங்களாக இருக்கும் பிரச்சனை குறித்தும், அதற்காக தான் எடுத்துவரும் சிகிச்சை குறித்தும் பேசியிருந்தார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் பயங்கரமான வைரலான நிலையில் பலரும் தங்களினால் முடிந்த உதவிகளை பாவா லட்சுமணனுக்கு செய்து வருகின்றனர்.

Advertisement

இப்படிப்பட்ட நிலையில் தான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி, மற்றும் கலக்க போவது யாரு என்ற நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமான நடிகரான KPY பாலா, சமீபத்தில் சிகிச்சை பெற்றுவரும் பாவா லட்சுமணனை சந்தித்து நலம் விசாரித்தார். அதோடு தன்னால் முடிந்த உதவியையும் செய்தார். குறிப்பிடத்தக்க வகையில் பாலா 30 ஆயிரம் ருபாய் பணத்தை பாவா லட்சுமணனுக்கு நிதியாக வழங்கினார்.

இந்த பணத்தை அவர் கொடுக்கும் போது தான் 1 லட்சம் ருபாய் கொடுக்கலாம் என்று இருந்ததாகவும், ஆனால் வங்கிக்கணக்கில் 32ஆயிரம் ருபாய் தான் இருந்ததால் பெட்ரோல் செலவுக்கு 2000ஆயிரம் போக 30,000 மட்டுமே தன்னால் அன்பு பரிசாக வழங்குவதாக கூறினார். மேலும் இதன் போது பாவா லட்சுமணன் மாயி படத்தில் தன்னுடைய அடையாள நடிப்பான “வாம்மா மின்னல்” டயலாக்கையும் நடித்து காட்டினார். பாலாவின் இந்த வீடியோவை கண்ட ரசிகர்கள் பலரும் பாலாவின் செயலை பாராட்டி வந்தார்கள்.

Advertisement

ஆனால் வழக்கம் போல இந்த வீடியோவிற்கு சிலர் எதிர்மறையான விமர்சனங்களையும் முன் வைத்தார்கள். அதிலும் குறிப்பாக உதவி செய்துவிட்டு ஏன் அதை வெளியில் காட்டிக் கொள்கிறீர்கள் என்று விமர்சித்தனர். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பாலா இது குறித்து கூறியதாவது : – இதை நான் வெளியில் சொல்ல வேண்டும் என்பதற்காக எப்படி செய்யவில்லை. அவரின் மேனேஜர் தான் நீங்கள் வீடியோ போட்டால் அதன் மூலமாக சிலர் பார்ப்பார்கள் என்று சொன்னார்.

அந்த வகையில் ஒரு மருத்துவர் அந்த வீடியோவை பார்த்துவிட்டு இலவசமாக சிகிச்சை அளிப்பதாக சொன்னார்கள். நான் கூட அவரின் சிகிச்சைக்காக ஒரு லட்ச ரூபாயை கொடுக்கலாம் என்று தான் நினைத்தேன். ஆனால், அந்த அளவிற்கு என்னிடம் வருமானம் இல்லை. நான் யாரிடமும் வாங்கி கொடுக்கவில்லை, என்னிடம் இருந்ததை கொடுத்தேன். இன்னும் நான் கொடுக்க வேண்டும் என்று தான் நினைக்கிறேன். ஆனால், எனக்கு வருவதை வைத்து தான் எல்லாம் செய்ய முடியும்’ என்று கூறியுள்ளார்.

Advertisement