செய்யும் உதவிகளால் பாலாவின் காதலுக்கு வந்த சிக்கல் – பெற்றோரிடம் சமரச பேச்சு

0
407
- Advertisement -

கே பி ஒய் பாலாவிற்கு கூடிய விரைவில் திருமணம் ஆக இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாலா. இவரை அனைவரும் வெட்டுக்கிளி என்று தான் அழைப்பார்கள். அவரின் பெயர் தான் மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது. இவர் சாதாரண நபராகத்தான் விஜய் டிவியில் நுழைந்தார். ஆரம்பத்தில் நிகழ்ச்சியில் காமெடி செய்து வந்த இவர் மற்றவர்கள் கொடுக்கும் கவுண்ட்டருக்கு உடனடியாக பதில் கவுண்ட்டர் கொடுத்து விடுவார்.

-விளம்பரம்-

அதற்க்காக இவர் இரவு பகலாக தன்னை தானே தயார் படுத்திக் கொண்டு இருந்தார். அந்த வகையில் இவருக்கு திருப்புமுனையாக இருந்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சி சமையலை மையப்படுத்தி இருப்பதாக இருந்தாலும் அதிலும் செய்யும் காமெடிகள் தான் அந்த நிகழ்ச்சியை இந்த அளவிற்கு வளர்த்து விட்டது. மேலும், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட KPY பாலா செய்யும் காமெடிகளுக்கு அளவே கிடையாது. சமீபத்தில் தான் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி கோலாகலமாக முடிவடைந்தது.

- Advertisement -

பாலா குறித்த தகவல்:

இதன் மூலம் இவருக்கு சினிமா வாய்ப்பு வந்தது. ஏற்கனவே இவர் விஜய் சேதுபதி படம், புலிக்குட்டி பாண்டி, யோகி பாபு நடித்த Shoe, பாண்டி, விமர்சகரான ப்ளூ சட்டை மாறனின் ஆண்டி இந்தியன், நாய் சேகர் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். அதோடு இவர் பல்வேறு நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராகவும், விஜே வாகவும் பணியாற்றி வருகிறார். அதோடு இவர் தான் சம்பாதித்த பணத்தின் மூலம் தன் பகுதியில் உள்ள சிறியவர்களை படிக்க வைப்பதுடன், ஆதரவற்ற குழந்தைகளை படிக்க வைப்பது, ஏழை மக்களுக்கு மருத்துவ செலவிற்கு என தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.

சமூக சேவை செய்யும் பாலா:

அதுமட்டும் இல்லாமல் நிகழ்ச்சிகள் மூலம் கிடைக்கும் பரிசு, பணத்தை எல்லாம் அவர் ஆதரவற்ற இல்லத்திற்கு தான் கொடுத்திருக்கிறார். கடந்த ஆண்டு தன் பிறந்த நாளை முன்னிட்டு முதியோர் இல்லத்திற்கு ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கிக் கொடுத்திருந்தார் பாலா. இது குறித்து பலருமே பாராட்டி இருந்தார்கள். அதை தொடர்ந்து இவர் மலை கிராம மக்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்து இருக்கிறார்.
மேலும், இவர் ஆட்டோ, தையல் மெஷின், திருமண செலவுகள், கல்வி செலவு, மருத்துவ செலவு என்ற பல வகைகளில் தன்னால் முடிந்த உதவிகளை செய்திருக்கிறார்.

-விளம்பரம்-

பாலா திருமணம்:

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கே பி ஒய் பாலா, நான் காதலித்து வரும் பெண்ணை தான் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறேன் என்று கூறியிருந்தார். இதை பார்த்த பலருமே யார் அந்த பெண்? உங்கள் காதலுக்கு ஓகே சொல்லி விட்டார்களா?என்றெல்லாம் கேட்டு இருக்கிறார்கள். இதை அடுத்து பாலாவின் நண்பர்கள் கூறியிருப்பது, பாலா காதலித்து வரும் பெண்ணுடைய வீட்டில் தான் திருமணத்திற்கு தயக்கம் காட்டுகிறார்கள். பாலா காரைக்காலை சேர்ந்தவர். அந்த பகுதி பெண்ணை தான் இவர் காதலிக்கிறார். இரண்டு பேரும் ஒருவருக்கு ஒருவர் காதலித்து வருகிறார்கள். முதலில் பாலாவை திருமணம் செய்ய அந்த பெண் வீட்டில் சம்மதம் சொன்னார்கள். ஆனால், இப்போ என்னன்னு தெரியவில்லை தயக்கம் காட்டுகிறார்கள்.

பாலா நண்பர்கள் சொன்னது:

பாலா பலருக்கும் உதவிகள் செய்து வருவதை பார்த்து அந்த பெண்ணுடைய அம்மா அப்பாவிடம் யார் என்ன சொன்னார்கள்? என்று தெரியவில்லை. சினிமா வருமானம் நிலையானது இல்லை. காசு கிடைக்கும்போது கொஞ்சம் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும். வாய்ப்பில்லாத போது அது உதவும். அது தெரியாமல் கிடைக்கிற காசை எல்லாம் உதவி என்ற பெயரில் தூக்கி கொடுத்தால் பொண்டாட்டி பிள்ளைகளை வருங்காலத்தில் எப்படி காப்பாற்ற முடியும் என்று கேட்கிறார்கள். அதற்கு பாலாவும் சமாதனம் செய்ய முயல்கிறார். இருந்தும் அவர்கள் சமாதானம் ஆகவில்லை. தற்போது பாலா தரப்பில் சில பேர் பெண் வீட்டாரிடம் பேசி வருகிறார்கள். கூடிய விரைவிலேயே பாலா, தான் காதலித்த பெண் வீட்டில் சம்மதம் வாங்கி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவருடைய ரசிகர்களும் கூறி வருகிறார்கள்.

Advertisement