சேனல் உதவி செய்ய வேண்டும் – வடிவேல் பாலாஜிக்காக குரல் கொடுத்த Kpy நடுவர்.

0
1825
vadivelubalaji

விஜய் டிவி பிரபலமும் பிரபல காமெடி நடிகருமான வடிவேல் பாலாஜி உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் மேடை காமெடி கலைஞரும் காமெடி நடிகருமான பாலாஜி. வடிவேல் பாலாஜி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்க போவது யாரு சீசன் 4 மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அந்த சீசனில் வடிவேல் பாலாஜி பட்டத்தை வெல்லவில்லை என்றாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

கலக்க போவது யாரு சீசன் 4 நிகழ்ச்சியை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேரு காமெடி நிகழ்ச்சியில் அசத்திய வடிவேலு சமீபத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.வடிவேல் பாலாஜியின் மறைவிற்கு பல்வேறு சின்னத்திரை மற்றும் வெள்ளித் திரை பிரபலங்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வந்தனர் மேலும் நடிகர் விஜய் சேதுபதி கூட வடிவேலு பாலாஜியின் மறைவிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இருந்தார்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் பாலாஜியின் மறைவு குறித்து பேசியுள்ள கலக்க போவது நடுவராக சேது பேசுகையில், எந்த ஒரு சூழ்நிலையிலும் அவன் கோபப்பட்டு நான் பார்த்ததே கிடையாது. எப்படிப்பட்ட இக்கட்டான சூழல் வந்தாலும் நாங்கள் கொஞ்சம் கோபப்பட்டு விடுவோம். ஆனால், அவன் எப்போதும் கோபப்பட மாட்டான். அவன் இருக்கும் இடத்தை சந்தோஷமாக வைத்துக் கொள்வான். நான் எப்போதும் கூறுவது ஒரே ஒரு விஷயம்தான் கடந்த ஆறு மாத காலமாக பல்வேறு கலைஞர்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள்.

அவர்கள் அனைவருமே வேலை இல்லாமல் மன அழுத்தத்தில் இருக்கிறார்கள். இதற்கு அரசாங்கம் கண்டிப்பாக உதவி செய்ய வேண்டும். மேலும், சேனலும் இதற்கு உதவி செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார் ஏற்கனவே வடிவேல் பாலாஜியின் மறைவை அடுத்து நடிகர் சிவகார்த்திகேயன், வடிவேல் பாலாஜியின் குழந்தைகளுக்கான படிப்பு செலவை ஏற்று இருக்கிறார். அதேபோல நடிகர் விஜய் சேதுபதி கூட நேரில் சென்று தம்மால் முடிந்த உதவியை செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

-விளம்பரம்-
Advertisement