தனது மகளுடன் கலைமாமணி விருதோடு சங்கீதா – அவங்க மகள் எப்படி வளந்துட்டாங்க பாருங்களேன்.

0
61414
sangeetha
- Advertisement -

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பல்வேறு துறையில் சாதித்த சினிமா கலைஞர்களுக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்தது, இதில் நடிகை சங்கீதாவும் கலைமாமணி விருது பெற்றார். தமிழ் சினிமாவில் எண்ணற்ற பிரபலங்கள் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார், அந்த வகையில் கிரிஷ் மற்றும் சங்கீதா தம்பதிகளும் ஒருவர். நடிகை சங்கீதா 1998 ஆம் ஆண்டு நடிகர் நெப்போலியன் நடித்த பகவத்சிங் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால், அதற்கு முன்பாகவே ஒரு சில மலையாள படத்தில் நடித்து வந்தார்.

-விளம்பரம்-
Image

அதேபோல இவரது கணவரான கிருஷ் 2006 ஆம் ஆண்டு ‘வேட்டையாடு விளையாடு’ படத்தின் மூலம் இவரை பாடகராக அறிமுகம் செய்தார் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். மேலும் இவர், அழகிய அசுரா, சிங்கம் 3 முப்பரிமாணம் போன்ற படங்களில் சிறு சிறு வேடத்தில் நடித்துள்ளார். 2012ஆம் ஆண்டுக்கு பிறகு சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு நடுவராக சென்றுவிட்டார் கிருஷ்.

இதையும் பாருங்க : 45 வயதில் திருமணம் செய்யாமல் சிங்கிளாக வாழ்ந்து வரும் ரெட் பட நடிகை – இப்போ எப்படி இருக்கார் பாருங்க.

- Advertisement -

அதேபோல நடிகை சங்கீதா எண்ணற்ற படங்களில் நடித்து வந்தார். பாலா இயக்கிய ‘பிதாமகன்’ படத்தில் இவரது கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. இறுதியாக 2010 ஆம் ஆண்டு வெளியான ‘நெருப்புடா’ படத்தில் ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் தோன்றியிருந்தார். அதன் பின்னர் இவருக்கும் சினிமா வாய்ப்பு கிடைக்கவில்லை அதனால் இவரும் சின்னத்திரை பக்கம் திரும்பினார். இறுதியாக கடந்த ஆண்டு கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வந்தார்.

கிரிஷ் மற்றும் சங்கீதா தம்பதியருக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலில் திருமணம் நடைபெற்றது. திருமணமாகி மூன்று ஆண்டுகள் கழித்து இந்த தம்பதியருக்கு ஷிவியா என்ற பெண் குழந்தையும் பிறந்தார். சமீபத்தில் நடிகை சங்கீதாவிற்கு கலைமாமணி விருது கிடைத்தது. இதையடுத்து கலைமாமணி விருதுடன் தனது குடும்பத்துடன் சங்கீதா எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement