வெறும் இத்தனை ரூபாய்க்கு கொரோனா மருந்து – அசத்திய கிருஷ்ணகிரி டாக்டர். மத்திய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

0
1850
corona
- Advertisement -

கடந்த நான்கு, ஐந்து மாதங்களாக இந்த கரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் காட்டுத் தீயை விட வேகமாக கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனாவை எதிர்த்து போலீசார், மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள் என அனைவரும் தங்களுடைய உயிரை பணயம் வைத்து இரவு, பகல் என்று பாராமல் மக்கள் உயிரை காப்பாற்ற போராடி வருகிறார்கள். கொரோனா பரவலை தடுக்க பிரதமர் மோடி , நான்காம் கட்ட ஊரடங்கை பிறப்பித்துள்ளார்.

-விளம்பரம்-

இந்த நோய்க்கு மருந்து கண்டு பிடிக்க பல்வேறு உலக நாடுகளின் மருத்துவர்களும் ஆராய்ச்சியாளர்களும் தீவிர முயற்ச்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் கொரோனா நோய்க்கான தடுப்பு மருந்தை கண்டுபிடித்துவிட்டதாகவும் அதுவும் வெறும் 2 ரூபாய்க்கு அதனை விற்கலாம் என்றும் கிருஷ்ணாகிரி மருத்துவர் சார்பில் மனு ஒன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் வசந்தகுமார் என்பவர் சென்னை உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ள அந்த மனுவில், ‘கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளேன். இதுகுறித்த ஆராய்ச்சி கட்டுரைகளுடன் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு மனு அனுப்பி உள்ளேன். ஆனால் இந்த மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. எனது மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்கும்படி, மத்திய அரசுக்கும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கும் உத்தரவிட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வசந்தகுமார் சார்பில் வாதாடிய வழக்கறிஞர், ‘மனுதாரர் கண்டுபிடித்துள்ள ‘பீட்டா அட்ரெனர்ஜிக் பிளாக்கர்ஸ்’ மருந்து கொரோனா வைரஸை வராமல் தடுக்கும் எனவும், இதன் விலை வெறும் 2 ரூபாய் தான் எனவும்,  இந்த மருந்து ஏழை மக்களுக்கு பயனளிக்கும் எனவும் நீதிபதிகளிடம் தெரிவித்தார். இதனை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் கண்டு பிடிக்கப்பட்டுள்ள அந்த ஆய்வு அறிக்கையை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கும், மத்திய அரசுக்கும் அனுப்பிவைக்க வேண்டும் என்றும் இந்த ஆய்வு அறிக்கையை பரிசீலித்து மருத்துவ கவுன்சிலும், மத்திய அரசும் உரிய முடிவை விரைவாக அறிவிக்க வேண்டும் உத்தரவிட்டுள்ளது.

-விளம்பரம்-
Advertisement