நான் சொல்வதைக் கேட்டு நடிக்கும் ஒரே நடிகர் இவர்தான் ! கே எஸ் ரவிக்குமார் புகழாரம்

0
3448
ks-ravikumar
- Advertisement -

எந்த இரு மொழி சினிமாவிலும் நடிகர்கள் தங்களுக்கு ஏற்ப இயக்குனர்களிடம் வசனங்களை வைக்க சொல்வது இயல்பு. இதனை வைத்து தற்போது ராஜி, கமல், விஜய் ஆகியோரை மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார் இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார்.

ks ravikumar

- Advertisement -

தற்போது தெலுங்கில் ஜெய் சிம்ஹா என்ற படத்தினை இயக்கியுள்ளார் கே.எஸ் ரவிக்குமார். இந்த படம் வரும் 12ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தின் பிரமோசன் விழாவில் கலந்து கொண்டு பேசிய கே.எஸ் ரவிக்குமார்,

நான் பணியாற்றிய பல நடிகர்கள் தங்களுக்கு ஏற்ப வசனங்களை மாற்றி எழுதக்கூறி இருக்கிறார்கள். ஆனால் அப்படி மாற்றசொல்லாத நடிகர்கள் இரண்டு பேர் மட்டுமே.நான் சொல்வதை தவிர வேறு எதனையும் மாற்ற சொல்ல மாட்டார்கள் அவர்கள். அதில் ஒன்று அஜித் இன்னொன்று பாலையா (தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா)

இதனால் அவரை விஜய், அஜித் மற்றும் கமல் ஆகியோரை தான் மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார் என ட்விட்டர், பேஸ்புக்கில் பேசி வருகின்றனர்.

ajith

ஏனெனில், ரஜினியை வைத்து முத்து, படையப்பா மற்றும் லிங்கா ஆகிய படங்களையும், கமலை வைத்து அவ்வை சண்முகி, தெனாலி, பஞ்ச தந்திரம், தராவதாரம் மற்றும் மன்மதன் அம்பு ஆகிய படங்களையும் இயக்கியுள்கார் கே.எஸ் ரவிக்குமார்.

kamal-rajini

அதேபோல் விஜயை வைத்து மின்சார கண்ணா, படத்தையும் அஜித்தை வைத்து வில்லன், வரலாறு ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார். இதனால் இவர்கள நாலு பேரை பற்றியும் ரவிக்குமாருக்கு தெரியும். இதனால் அஜித்தை தவிர மற்ற மூவரையும் தான் தாக்கி பேசியுள்ளார் என கூறப்படுகிறது.