இசையமைப்பாளர் யாருன்னு கண்டுபிடிச்சதுக்கே தங்க நாணயமா – அப்போ ஹீரோ யாருன்னு சொன்னா. மிரள வைத்த ஜென்டில் மேன் தயாரிப்பாளர்.

0
556
Gentle man
- Advertisement -

பிரம்மாண்டமான செலவில் மரகதமணி இசையில் உருவாக இருக்கும் ஜென்டில்மேன் 2 படத்தின் பற்றிய தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர் சங்கர். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாமே பிரம்மாண்டம். அதோடு இவர் இயக்கிய படங்கள் எல்லாம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 1993ஆம் ஆண்டு வெளிவந்த படம் ஜென்டில்மேன். இந்த படத்தின் மூலம் தான் சங்கர் அவர்கள் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தை தயாரிப்பாளர் கே. டி. குஞ்சுமோன் தயாரித்திருந்தார். இந்த படத்தில் அர்ஜுன், மதுபாலா, கவுண்டமணி, செந்தில், சரண்ராஜ், வினித் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

இந்த படம் அந்த ஆண்டுகளில் வெளிவந்த இந்திய படங்களில் மிகவும் செலவு செய்து எடுக்கப்பட்ட படம் என்பது குறிப்பிடதக்கது. அதுமட்டுமில்லாமல் இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. இன்னும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டு வருகிறது. இதற்கு காரணமானவர்கள் ஒருவர் தான் தயாரிப்பாளர் கே. டி. குஞ்சுமோன். தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான தயாரிப்பாளர் கே. டி. குஞ்சுமோன். அதோடு இவருக்கு என்று தமிழ் சினிமாவில் ஒரு தனி இடம் உண்டு. ஆரம்ப காலத்தில் கே. டி. குஞ்சுமோன் அவர்கள் திரைப்பட விநியோகஸ்தராக தான் சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்தார்.

- Advertisement -

கே. டி. குஞ்சுமோன் திரைப்பயணம்:

அதற்குப் பிறகு மலையாளத்தில் மம்முட்டி, நெடுமுடி வேணு உள்ளிட்ட பல நடிகர்களின் வெற்றி படங்களை தயாரித்து உள்ளார். பின் 1991 ஆம் ஆண்டு பவித்ரன் இயக்கிய வசந்தகால பறவைகள் படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இந்த படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. அதனை தொடர்ந்து அந்த படத்தில் உதவி இயக்குனராக இருந்த சங்கரை வைத்து ஜென்டில்மேன் படத்தை தயாரித்தார். இந்த படமும் மிக பெரிய அளவில் வசூல் சாதனை செய்தது. அதற்கு பிறகு சிந்துநதி பூ, காதலன், ரட்சகன், காதல் தேசம் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை கே. டி. குஞ்சுமோன் தயாரித்திருக்கிறார்.

கே. டி. குஞ்சுமோன் சினிமாவில் இருந்து விலகிய காரணம்:

கடைசியாக இவர் தயாரித்த படங்கள் நஷ்டம் அடைந்ததால் இவர் தயாரிப்பில் இருந்து விலகி இருந்தார். அதற்குப் பிறகு தயாரிப்பில் இருந்து ஒதுங்கியிருந்த கே. டி. குஞ்சுமோன் தனது மகன் அபியை கதாநாயகனாக வைத்து ‘காதலுக்கு மரணமில்லை’ என்ற படத்தை எடுத்தார். அந்த படம் டீசர் வரை வந்தது. பின் மகன் ஹீரோவாக நடித்த கோடீஸ்வரன் என்ற படத்தையும் தயாரித்தார். ஆனால், முந்தைய படங்களின் நஷ்டத்தினால் தன்னுடைய மகனின் படத்தை வெளியிட முடியாமல் திணறினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கே. டி. குஞ்சுமோன் மீண்டும் தயாரிப்பாளராக தமிழ் திரைஉலகில் ரீ-என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-

மீண்டும் ஜென்டில்மேன் 2 :

இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் தயாரிப்பாளராக அறிமுகமான ஜென்டில்மேன் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளார். அதேபோல் ஜென்டில்மேன் 2 படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதை சரியாக கணிக்கும் முதல் மூன்று பேருக்கு தங்ககாசு பரிசாக அளிக்க போவதாக கூறியிருந்தார். இது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி இருந்தது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் மரகதமணி என்ற தகவல் வெளியாகி உள்ளது. பாலச்சந்தரின் அழகன் உட்பட பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். தமிழில் தான் அவருடைய பெயர் மரகதமணி. தெலுங்கில் கீரவாணி. அதுமட்டுமில்லாமல் தெலுங்கில் பிரமிக்க வைக்கும் படங்களை தந்த ராஜமௌலியின் பாகுபலி, RRR ஆகிய படங்களின் இசையமைப்பாளர்.

ஜென்டில்மேன் 2 படத்தின் நடிகர்கள்:

தற்போது இவர் ஜென்டில்மேன் 2 படத்துக்கு இசையமைக்கிறார் என்பது உறுதி ஆகி இருக்கிறது. மேலும், இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்கள் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். ஜென்டில்மேன் 2 படத்தின் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்து கே. டி. குஞ்சுமோன் நட்பு வட்டாரத்தில் விசாரித்தபோது அவர்கள் கூறியது, இது முழுக்க முழுக்க புது படம் தான் என்று கூறி இருக்கின்றனர். எனவே, இது ஜென்டில் மேன் படத்தில் பார்ட் 2 இல்லை என்பதாலும் படத்திற்கு ஏ ஆர் இசை இல்லை என்பதாலும் ரசிகர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்து இருக்கின்றனர்.

Advertisement