தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்த மணிகண்டன் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘குடும்பஸ்தன்’ எப்படி இருக்கு ?

0
227
- Advertisement -

சினிமாக்காரன் எஸ். வினோத் தயாரிப்பில் இயக்குனர் ராஜேஸ்வர் காளிசாமி இயக்கி இன்று வெளியாகி இருக்கும் படம் தான் ‘குடும்பஸ்தன்’. இந்த படத்தில் நடிகர் மணிகண்டன் மற்றும் சான்வி மேகனா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் இணைந்து குரு சோமசுந்தரம், ஆர் சுந்தர்ராஜன் என பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு வைசாக் இசையமைத்திருக்கிறார்,சுஜித் N சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார். தொடர்ந்து வெற்றி படங்களை கொடுக்கும் மணிகண்டனின் இப்படம் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்ப்போம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

மிடில் கிளாஸ் பையனாக இருக்கும் மணிகண்டன் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். அப்போது அவர் வேறு சமூகத்தைச் சேர்ந்த ஹீரோயினை காதல் திருமணம் செய்து கொள்கிறார். அதனால் இவர்கள் இரு வீட்டிலும் திருமணத்திற்கு எதிர்ப்பு ஏற்படுகிறது. இருந்தாலும் அவர்களை வீட்டில் சேர்த்துக் கொள்கிறார்கள். திருமணத்திற்கு பிறகு குடும்பத்தின் மொத்த பொறுப்பும் மணிகண்டன் கைக்கு வருகிறது. இந்த சமயம் பார்த்து கிராபிக் டிசைனராக வேலை செய்யும் மணிகண்டன் வேலையின் போது நகைக்கடை பிரதிநிதியை அறைந்து விடுகிறார்.

- Advertisement -

அதனால் அவருக்கு வேலை போய் விடுகிறது. தனக்கு வேலை போனதை வீட்டில் இருப்பவர்களுக்கு தெரியாமல் மணிகண்டன் மறைக்கிறார். அதே நேரத்தில் மணிகண்டனின் அக்கா கணவரான குரு சோமசுந்தரம் எப்போ சான்ஸ் கிடைக்கும், எப்போ மணிகண்டனை மட்டம் தட்டலாம் என்று காத்துக் கொண்டிருக்கிறார். இந்த சூழலில் வீட்டு தேவைகளுக்காக கடன் வாங்கும் மணிகண்டன் அதை சமாளிக்க முடியாமல் திணறுகிறார். அதன் பின் என்ன நடந்தது? இந்த நெருக்கடியிலிருந்து அவர் வெளிவந்தாரா? இல்லையா? என்பதுதான் படத்தின் மீதி கதை.

இயக்குனர் திருமணமான இளைஞன் படும் கஷ்டங்கள் என்கிற சீரியஸான கதையை எடுத்திருந்தாலும், அதை நகைச்சுவை கலந்து சொல்லி இருப்பது படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது. மணிகண்டன் இந்த படத்தில் நவீன் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். பக்கத்து வீட்டு பையன் போன்ற எதார்த்தமான நடிப்புடன் மணிகண்டன் கதைக்கு உயிர் கொடுத்துள்ளார். அவர் படத்தில் கடன் வாங்கிவிட்டு தவிப்பதில் தொடங்கி எல்லாமே கலகலப்பு தான்.

-விளம்பரம்-

மேலும், மணிகண்டனின் அக்கா கணவராக நடித்திருக்கும் குரு சோமசுந்தரம் ஸ்டேட்ஸ் பைத்தியமாக அசத்தியிருக்கிறார். மணிகண்டன் மற்றும் குரு சோமசுந்தரம் இடையான கெமிஸ்ட்ரி படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது. படத்தின் கதாநாயகி சான்வி தனக்கு கொடுத்த வேலையை சரியாக செய்து இருக்கிறார். மேலும், மணிகண்டனின் பெற்றோராக வரும் சுந்தர்ராஜன் மற்றும் குடசநாடு கனகம் படம் முழுவதும் நம்மை சிரிக்க வைக்கிறார்கள். மொத்தத்தில் படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரங்களின் தேர்வும் கச்சிதமாக பொருந்தியுள்ளது.

ஆனால், ஒரு திறமையான கிராபிக் டிசைனராகஇருப்பவருக்கு வேலை போனால், இன்னொரு வேலை கிடைக்காமல் இருப்பதெல்லாம் லாஜிக் இல்லாதது போல் தெரிகிறது. படத்தின் முதல் பாதி ஜாலியாக சென்றாலும், இரண்டாம் பாதியில் தடுமாற்றம் இருக்கிறது. ஆனால், இன்றைய காலகட்டத்தில் மக்களுக்கு இருக்கும் மன அழுத்தத்தை குறைக்க, குடும்பஸ்தன் போன்ற படத்தை குடும்பத்தோடு தாராளமாக பார்க்கலாம்.

நிறை:

எதார்த்தமான குடும்ப கதை

மணிகண்டனின் நடிப்பு சிறப்பு

கதாபாத்திரங்களின் தேர்வு

குறை:

ஒரு சில லாஜிக் குறைபாடுகள் இருக்கிறது.

இரண்டாம் பாதி தடுமாற்றம்

மொத்தத்தில் ‘குடும்பஸ்தன்’ குடும்பத்தோடு பார்க்க சிறந்த படம்.

Advertisement