சென்னை குன்றத்தூரில் கள்ளக்காதலனுடன் வாழ்வதற்காக தனது குழந்தைகளை விஷம் கொடுத்து கொலை செய்து போலீசாரிடம் சிக்கியுள்ள அபிராமியின் செய்திகள் தான் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கொலை குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ள அபிராமியை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
குன்றத்தூர் அபிராமி புழல் சிறையில் என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா? #Abirami #Kundrathur #Chennai #Puzhal #Jail pic.twitter.com/nmMFz4JeRF
— Oneindia Tamil (@thatsTamil) September 6, 2018
கள்ள காதலுக்காக தனது கணவர் மற்றும் பெற்ற பிள்ளைகளையே கொள்ள நினைத்த அபிராமி தற்போது சிறையில் கம்பி எண்ணி கொண்டிருக்கிறார். பலரும் அபிராமி ஒரு இறக்கமற்ற தாய் என்று அவரை வறுத்தெடுத்து வருகின்றனர். கல்நெஞ்சம் கொண்டு பிஞ்சி குழந்தைகளை கொன்ற அபாரமி தற்போது சிறையில் என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா.
சிறையில் அவருக்கு அபிராமி அங்கே அளிக்கப்படும் உணவுகளை சரியாக சாப்பிடுவதில்லையாம், அங்கே இருக்கும் சக பெண் கைதிகள் யாரிடமும் பேசாமல் அமைதியாகவே இருக்கிறாராம். ஒருவேளை அபிராமியிடம் பேச சில பெண் கைதிகள் முயன்றாலும் அவர்கள் முகத்தை கூட பார்க்காமல் இருக்கிறாராம்.
எப்போதும் சிறையில் அழுது கொண்டே இருக்கும் அபிராமி, சில சமயம் ஆவேசத்துடன் கண்கள் சிவந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறதாம். உண்மையில் பெற்ற பிள்ளைகளை தானே கொன்ற சோகத்தில் அழுகிறாரா, இல்லை சுந்தரத்துடன் சேர முடியவில்லை என்ற ஏக்கத்தில் அழுகிறாரா என்பது அபிராமிக்கே வெளிச்சம்.