குன்றத்தூர் அபிராமிக்கு அவ்வளவாக அறிமுகம் தேவை இருக்காது. உல்லாச வாழ்க்கைக்காக பத்து மாதம் சுமந்து பெற்ற குழந்தைகளை ஈவு இறக்கமின்றி விஷம் கொடுத்து கொன்ற கொடூரத்தை அரங்கேற்றியவர். 

பெற்ற குழந்தைகளை கொலை செய்துவிட்டு
தலைமறைவான அபிராமியை நாகர்கோயிலில் காவல்துறையினர் கைது செய்தனர். ‘கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காக, குழந்தைகளை விஷம் கொடுத்து கொன்றதாக அபிராமி கொடுத்த வாக்கு மூலம் ஊடகங்களில் வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதையும் படியுங்க : அபிராமிக்கு செய்த பாவத்துக்கு கருட புராணத்தில் இதுதான் தண்டனை..!

Advertisement

இதைத் தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீன் கோரிய அபிராமி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக நேற்று அவரைக் காஞ்சிபுரம் நீதிமன்றத்திற்குக் காவல்துறையினர் அழைத்து வந்தனர். அபிராமியின் வழக்கறிஞர் வராததால் வழக்கை ஜனவரி 2ம் தேதிக்கு நீதிபதி கருணாநிதி ஒத்திவைத்துள்ளார்.

இதுவரை மூன்று முறை அபிராமி ஜாமீன் கோரியுள்ளார். ஆனால், மூன்று முறையும் அவரது ஜாமின் மறுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவரது கணவர் கூறுகையில் நான் இதுவரை அபிராமியை சிறையில் சென்று சந்திக்கவே இல்லை என்று கூறியுள்ளார். மேலும், அரசு தரப்பு வக்கீலோ அபிராமிக்கு, சுந்தரத்திற்கு தண்டனை வாங்கி கொடுக்காமல் விடமாட்டேன் என்று உறுதியாக உள்ளாராம். ஆனால், அபிராமிக்கோ விரைவில் ஜாமினில் வெளியே வர வேண்டும் என்பது தான் எண்ணம் என்று சிறை வாசிகள் கூறுகின்றனர்.

Advertisement

Advertisement
Advertisement