குக் வித் கோமாளியில் நடந்தது என்ன என்று குரேஷி போட்டு இருக்கும் வீடியோ தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கடந்த சில நாட்களாகவே மணிமேகலை- பிரியங்கா சர்ச்சை தான் இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இந்த நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் கடந்த வாரம் குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியிலிருந்து திடீரென மணிமேகலை விலகியது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
இது தொடர்பாக மணிமேகலை போட்ட பதிவில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இனி நான் இல்லை. இந்த சீசனில் மற்றொரு பெண் தொகுப்பாளர் ஆதிக்கம் செலுத்துகிறார். குறிப்பாக, அவர் ஆங்கர் பார்ட்டில் எல்லாம் தலையிடுகிறார். அவர் நிகழ்ச்சியில் குக்காக இருக்க வேண்டும். ஆனால், அதை அவர் அடிக்கடி மறந்து விட்டு வேண்டுமென்றே என்னை வேலை செய்ய விடாமல் தடுக்கிறார். அதனால் தான் நான் இந்த நிகழ்ச்சியில் தொடர விரும்பவில்லை என்று எமோஷனலாக பதிவிட்டு இருந்தார். இப்படி இவர் சொன்னது தொகுப்பாளினி பிரியங்காவை தான் என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது.
பிரபலங்கள் கருத்து:
இதை அடுத்து இந்த விவகாரம் தொடர்பாக பிரபலங்கள் பலருமே மணிமேகலைக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள். அதோடு பலரும் பிரியங்காவை விமர்சித்து திட்டியும் வருகிறார்கள். இந்நிலையில் குரேஷி, நான் யாருக்கும் சாதகமாக பேசவில்லை. அன்று செட்டில் என்ன நடந்தது என்றால், அந்த ரவுண்டில் திவ்யா துரைசாமி எலிமினேட் ஆனாங்க. கடைசியா போகும்போது திவ்யா எல்லாரையும் அட்ரஸ் பண்ணாங்க. பிரியங்காவை பத்தி பேசும்போது, அவங்க எனக்கு ரொம்ப பிடிக்கும் ரொம்ப சப்போர்ட்டிவா இருந்தாங்க என்று பேசுனாங்க. அப்போ பிரியங்கா நான் திவ்யா துரைசாமி பற்றி பேச வேண்டும் என்று ஆங்கர்ஸ் கிட்ட கேட்டாங்க. அப்போ ரக்சன் ஓகே சொல்லிட்டாரு. மணிமேகலை எதுவும் பேசவில்லை.
குரேஷி வீடியோ :
அப்ப பிரியங்கா பேச ஆரம்பித்த உடனே, கேமரா ரோலிங்ல இருக்கும்போதே மணிமேகலை குறுக்கே வந்து, நீங்க பேச வேண்டாம் பிரியங்கா என்று சொன்னாங்க. ஏற்கனவே வெளியே எல்லாம் நீங்க தான் தொகுப்பாளினி என்ற மாதிரி பேசுறாங்க அப்படின்னு சொன்ன உடனே பிரியங்கா ஷாக் ஆயிட்டாங்க. திவ்யா என்ன பத்தி பேசுறதுனால நான் அவளை பத்தி பேசணும் என்று பிரியங்கா சொன்னாங்க. அதுக்கு மணிமேகலை ரொம்ப ஸ்ட்ரிக்டா இல்ல நீங்க பேச வேண்டாம் என்று சொன்னவுடனே, பிரியங்கா ஹர்ட் ஆயிட்டு வெளிய போயிட்டாங்க.
இது தான் பிரச்சனை:
அதற்குப் பிறகு , பிரியங்கா ப்ரொடக்ஷன் கிட்ட போயிட்டு ஒரு கண்டஸ்டன்டா எனக்கு பேச உரிமை இருக்கு என்று சொல்லியிருக்காங்க. ஆனா, எனக்கு தெரிஞ்சு பிரியங்காவோ, இல்லை ப்ரொடக்ஷன் டீமோ மணிமேகலை சாரி சொல்லணும் என்று சொல்லவில்லை. இப்போ மணிமேகலை செல்ப் ரெஸ்பெக்ட் என்ற ஒரு விஷயத்தை கொண்டு வராங்க. அப்ப பிரியங்கா இவ்வளவு வருஷமா டீவில இருக்காங்க. அவங்கள அப்போ பேசுவதற்கு மணிமேகலை அனுமதித்து இருக்கலாம். அவங்கள அந்த இடத்தில் பேசவிட்டு, ப்ரொடக்ஷன் டீன் கிட்ட அவங்களுக்கு இருக்க பிரச்சனையை மணிமேகலை சொல்லி இருக்கலாம்.
மணிமேகலை இதை பண்ணி இருக்கலாம்:
இல்லையென்றால் மணிமேகலை பிரியங்காவ தனியாக கூப்பிட்டு பேசி இருக்கலாம். அப்புறம் அடுத்த வாரம் சூட்டிங்ல, கடந்த வாரம் நடந்த பிரச்சனை அட்ரஸ் பண்ணனும் என்று எல்லாரும் சொன்னவுடனே மணிமேகலை அதெல்லாம் என்னால் பண்ண முடியாது. நான் பிச்சை எடுத்தாலும் பரவாயில்லை என்று சொல்லிவிட்டு கேரவன் போய்ட்டாங்க. அன்னைக்கு ரெண்டரை மணி நேரம் சூட்டிங் நடக்கவில்லை. அன்னைக்கு சீரியலில் இருந்து செலிப்ரிட்டிஸ் எல்லாம் வந்திருந்தாங்க. அவங்களே வந்து என்கிட்ட குக் வித் கோமாளியில் ஜாலியாக இருக்கலாம் என்று சொல்லிட்டு வந்தா, என்ன இவ்வளவு பெரிய சண்டை போடுறீங்க என்று கேட்டார்கள். நான் அவங்ககிட்ட எனக்கே தெரியாது இன்னைக்கு தான் இந்த மாதிரி எல்லாம் நடக்கிறது என்று சொன்னேன். இதுதான் அன்று நடந்தது என்று குரேஷி கூறியுள்ளார்.