-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

1000ரூ மகளீர் உதவி தொகையை பிச்சை என்று குறிப்பிட்ட குஷ்பூ – திட்டி தீர்க்கும் நெட்சன்கள்.

0
494

போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக திமுக அரசை கண்டித்து குஷ்பூ அளித்து இருக்கும் பேட்டி தான் மிகப்பெரிய அளவில் சர்ச்சையாகி இருக்கிறது. சமீப காலமாகவே போதை பொருள் கும்பலை கைது செய்யும் நடவடிக்கை நடைபெற்று வருகிறது. இதனால் கடந்த சில வாரங்களுக்கு முன் டெல்லியில் இரண்டு போதைப் பொருள் குடோனில் போலீசார் சோதனை நடத்தி இருந்தது. அதில் சுமாராக 2000 கிலோ மெப்பட்ரோன் என்ற போதை பொருளை பறிமுதல் செய்யப்பட்டது. பின் போலீஸ் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடம் விசாரிணை நடத்தி இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

அப்போது விசாரணையில் இந்தியாவில் கடந்த மூன்று ஆண்டுகளாக டெல்லியை மையமாக கடந்த தான் வெளிநாடுகளுக்கு போதைப்பொருள் கடத்தப்படுவது தெரிய வந்திருக்கிறது. மேலும், 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த போதை பொருள் கடத்தலுக்கு முக்கிய நபராக செயல்பட்டவர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் என்பவர் தெரிய வந்திருக்கிறது. இவர் இதுவரை இறைவன் மிகப் பெரியவன், இந்திரா போன்ற படங்களை தயாரித்து இருந்தார்.

போதை பொருள் கடத்தல் விவகாரம்:

-விளம்பரம்-

தற்போது இவர் கயல் ஆனந்தி நடித்து இருக்கும் மங்கை என்ற படத்தை தயாரித்து இருப்பது தெரிய வந்திருக்கிறது. இந்த படம் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. அதோடு இவர் போதை பொருள் சாம்ராஜ்யத்தின் தலைவராக இருக்கிறார். மேலும், இவர் முன்னாள் திமுக நிர்வாகி என்று தெரியவந்திருக்கிறது. இதனால் அதிமுக, பாஜக கட்சிகள் எல்லாம் திமுகவை விமர்சித்து கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

குஷ்பூ பேட்டி:

அதுமட்டுமில்லாமல் போதைப் பொருள் கடத்தலை திமுக அரசு கண்டிக்க தவறவிட்டதை அடுத்து சென்னையில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் எல்லாம் நடைபெற்றிருக்கிறது. இதில் குஷ்பூ கலந்து கொண்டு தலைமை தாங்கி இருக்கிறார். பின் அவர் செய்தியாளர்களை சந்தித்து, தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கிடம் மட்டும் சுமார் 3000 கிலோ போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், இதைப்பற்றி திமுக கூட்டணி கட்சிகள் ஏதாவது வாய் திறந்ததா? இல்லை. காரணம், அந்த ஜாபர் சாதிக் திமுகவுக்கும் பணம் கொடுத்திருக்கிறார்.

-விளம்பரம்-

திமுக குறித்து சொன்னது:

இந்த விவகாரம் குதித்து முதல்வர் ஸ்டாலின் என்ன சொல்லப் போகிறார்? தமிழகத்தில் ஏற்கனவே நிறைய பிரச்சனைகள் இருக்கின்றது. இந்த நிலையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் பிச்சை போட்டால் திமுகவுக்கு அவர்கள் ஓட்டு போட்டு விடுவார்களா? மேலும், தாய்மார்களின் நீண்ட நாள் கோரிக்கையே டாஸ்மாக்கை இழுத்து மூடுவது தான். தில் இருந்தால் நீங்கள் அதை செய்யுங்கள் பார்க்கலாம். போதை பொருள் பிரச்சனையை நீங்கள் தீர்த்து வைக்கவில்லை.

மகளிர் உதவி தொகை குறித்து சொன்னது:

தாய்மார்கள் எல்லோரும் பள்ளி, கல்லூரிக்கும் போகும் தங்களுடைய பிள்ளைகள் போதைக்கு அடிமையாகி விடுவார்களோ? என்று பயந்து கொண்டிருக்கிறார்கள் என்றெல்லாம் திமுகவை விமர்சித்து பேசியிருக்கிறார். இப்படி குஷ்பூ மகளிர் உரிமை தொகையை பிச்சை என்று கூறிருப்பதால் மிகப்பெரிய அளவில் சர்ச்சையாகி இருக்கிறது. இது குறித்து பலருமே, எப்படி நீங்கள் கூறலாம்? என்றெல்லாம் கேள்வி எழுப்பினார்கள். இது தொடர்பாக குஷ்புவிடம் விளக்கம் கேட்ட முயன்ற போதும் அவர் எந்த ஒரு பதிலையும் சொல்லாமல் மறுத்திருக்கிறார்.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news