இது கூட தெரியாம இருக்கீங்க, CAA குறித்து விஜய் வெளியிட்ட அறிக்கை – கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

0
699
- Advertisement -

சிஏஏ சட்டத்திற்கு எதிராக விஜய் வெளியிட்டு இருக்கும் அறிக்கை தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட CAA சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள். குறிப்பாக 2017 ஆம் ஆண்டுக்கு முன்பு பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள் என பல பேர் இடம் பெயந்தார்கள்.

-விளம்பரம்-

இவர்களுக்கு இந்திய குடியுரிமையும் வழங்க வழிவகை செய்யப்பட்டது. ஆனால், இந்த நாடுகளில் இருந்து குடியேறிய இஸ்லாமியர்களுக்கு மட்டும் இந்த தகுதி தரவில்லை. குடியுரிமை பெறுவதற்கு மதம் ஒரு காரணியாக வைக்க கூடாது என்று இந்த சிஏஏ சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி இருந்தார்கள். இந்த நிலையில் இது தொடர்பாக தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் அவர்கள் அறிக்கை ஒன்று வெளியிட்டு இருந்தார். அதில் அவர், சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் அனைவரும் வாழும் சூழலில், பிளவுவாத அரசியலை முன்னிறுத்திச் செயல்படுத்தப்படும் இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 (CAA) போன்ற எந்தச் சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல.

- Advertisement -

CAA சட்டம் குறித்த சர்ச்சை:

தமிழ்நாட்டில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும். என்று குறிப்பிட்டு இருந்தார். இதைப் பார்த்த பலருமே விஜயின் அறிக்கையை விமர்சித்தும் கிண்டல் செய்தும் வருகிறார்கள். காரணம், 2019 ஆம் ஆண்டே தமிழ்நாட்டில் இந்த சட்டத்திற்கு எதிராக திமுக அரசு தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்திருந்தது. அதன்பின் சட்டமன்றத்தில் தமிழகத்தில் சிஏஏ கிடையாது என்ற தீர்மானமும் எடுத்து விட்டது. ஆனால், தற்போது விஜய் இதைப் பற்றி பேசுகிறார்.

விஜய்க்கு சொன்ன அறிவுரை:

யாராவது அவருக்கு எடுத்து சொல்லுங்கள். விஜய் அமைதியாக இருப்பது தான் நல்லது என்றும், மூன்று வரியில் அவர் இந்த அறிக்கையை வெளியிட்டது கூட ஒரு விதத்தில் ஓகே. ஆனால், இந்த அறிக்கையில் எந்த அரசு இந்த சட்டத்தை கொண்டு வந்தது? யார் கொண்டு வந்தார்கள்? என்று கூட சொல்லாமல் ஏன் கண்டனம் என்ற வார்த்தை கூட இல்லாமல் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். முக்கியமாக இந்த சட்டத்தை கொண்டு வந்த மத்திய அரசை எதிர்த்து விஜய் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

-விளம்பரம்-

நெட்டிசன்கள் விமர்சனம்:

மாறாக, அவர் இந்த சட்டத்தை நிறைவேற்றக்கூடாது என்று மாநில அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார். மத்திய அரசை விமர்சிக்காமல் மாநில அரசை விஜய் விமர்சனம் செய்வது ஏன்? விஜய் ஒரு அறிக்கையை வெளியிடுவதற்கு முன் தீவிரமாக ஆராய்ந்து வெளியிட வேண்டும். அதைப் பற்றி தெளிவான புரிதல் இருக்க வேண்டும். ஏதாவது ஒன்று வெளியிட வேண்டும் என்று வெளியிடக்கூடாது என்றெல்லாம் விமர்சித்து வருகிறார்கள். அனைவரும் எதிர்பார்த்தபடி விஜய் அவர்கள் அரசியலுக்கு வந்துவிட்டார் இவர் தன்னுடைய கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என்று பெயர் வைத்திருக்கிறார்.

தமிழக வெற்றி கழகம்:

இந்த பெயர் அறிவித்ததில் இருந்தே இந்த பெயரை விஜய் அறிவித்ததில் இருந்து விஜயின் மன்ற உறுப்பினர்கள், ரசிகர்கள் என பலருமே உற்சாகத்தில் இருக்கிறார்கள். அதோடு 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் விஜய் போட்டியிடவில்லை. 2026 ஆம் ஆண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக தயாராகுவோம் என்று விஜய் சொல்லியிருக்கிறார். முழு நேர அரசியலில் விஜய் ஈடுபட இருப்பதால் சினிமாவிலிருந்து விலகுவதாகுவதாகவும் அறிவித்து இருக்கிறார்.
பின் புதிய செயலியை தமிழக வெற்றி கழகம் அறிமுகப்படுத்தி இருக்கிறது. மூன்று நாட்களிலேயே 50 லட்சம் உறுப்பினர்கள் இந்த கட்சியில் இணைந்து இருக்கிறார்கள்.

Advertisement