சூரரை போற்றுவில் இவருக்கு தேசிய விருது கிடைச்சி இருக்கனும் – நடிகை குஷ்பூவின் ஆதங்க பதிவு. (யார சொல்றாரு பாருங்க)

0
263
kushboo
- Advertisement -

நடிகை ஊர்வசிக்கும் தேசிய விருது கிடைத்திருக்க வேண்டும் என பிரபல நடிகை பதிவிட்ட பதிவு தற்போது சோஷியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது. தேசிய திரைப்பட விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 67 வது தேசிய திரைப்பட விருதுகள் நடைபெற்றது. தற்போது 68 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு இருந்தது. தமிழில் பல படங்களுக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. அவற்றில் சூர்யாவின் சூரரைப்போற்று படத்திற்கு பல விருதுகள் கிடைத்திருக்கிறது.

-விளம்பரம்-

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி உட்பட பல நடிகர்கள் நடிப்பில் வெளியாகி இருந்த படம் சூரரைப்போற்று. இந்த படம் கடந்த 2020 ஆம் ஆண்டு அமேசானில் வெளியிடப்பட்டிருந்தது. இது ஏர் டெக்கான் நிறுவனத்தின் நிறுவனர் ஜிஆர் கோபிநாத்தின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம். சுவாரஸ்யமான திரைக்கதையுடன், நடிகர்களின் சிறப்பான நடிப்புடன் இந்த படம் வெளியாகி இருந்ததால் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருந்தது.

- Advertisement -

68 ஆவது தேசிய திரைப்பட விருதுகள்:

மேலும், இந்த படம் வெளியான போதே இந்த படத்திற்கு தேசிய விருது கிடைக்கும் என்று பலரும் பாராட்டி இருந்தார்கள். இந்த நிலையில் 68 ஆவது தேசிய திரைப்பட விருதில் சிறந்த நடிகருக்கான விருதை சூரரை போற்று படத்திற்காக சூர்யா வென்று இருக்கிறார். அது மட்டுமல்லாமல் நடிகை அபர்ணா பாலமுரளி சிறந்த நடிகைக்கான தேசிய விருதும், சிறந்த பின்னணி இசைக்கான விருதை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் பெற்று இருக்கிறார்.

குவியும் வாழ்த்துக்கள்:

சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது பிரிவில் சூரரைப்போற்று திரைக்கதை எழுத்தாளர்கள் ஷாலினி உஷா நாயர் மற்றும் சுதா கொங்கராவுக்கு விருது கிடைத்து உள்ளது. அதோடு சிறந்த படமாகவும் சூரரைப் போற்று தேசிய விருது கிடைத்து உள்ளது. ஆக மொத்தம் 5 பிரிவுகளில் 5 தேசிய விருதுகளை வென்று குவித்துள்ளது சூரரைப்போற்று திரைப்படம். இதற்கு ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் பாராட்டி வருகிறார்கள். இந்த நிலையில் நடிகை ஊர்வசிக்கும் தேசிய விருது கிடைத்திருக்க வேண்டும் என்று பிரபல நடிகை பதிவிட்டிற்கும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

ஊர்வசி குறித்த தகவல்:

சூரரை போற்று படத்தில் சூர்யாவுக்கு அம்மாவாக நடிகை ஊர்வசி நடித்திருந்தார். இவர் தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருகிறார். 80களில் இருந்தே இவர் சினிமாவில் நாயகியாக நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தவர். அன்று தொடங்கி தற்போது வரை இவர் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் ஆர் ஜே பாலாஜி, சத்யராஜ் நடிப்பில் வெளிவந்து இருந்த வீட்ல விசேஷம் என்ற படத்தில் ஊர்வசி நடித்திருந்தார். இந்த படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றது.

குஷ்பூ போட்ட டீவ்ட்:

மேலும், நகைச்சுவை, வெகுளி, கோபம், அழுகை என எல்லாவிதமான கதாபாத்திரத்திலும் ஊர்வசி நடித்து அசத்தியிருக்கிறார். தமக்கே உரிய உடல்மொழி மற்றும் டயலாக் டெலிவரியால் திரையில் நம்பமுடியாத மேஜிக்கை நிகழ்த்திக் காட்டுகிறார். இந்த நிலையில் ஊர்வசி குறித்து நடிகை குஷ்பு பதிவு ஒன்று போட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, ஊர்வசி விருது வென்றிருக்க வேண்டும் என நினைக்கிறேன். அவர் நடிப்பு அவுட் ஸ்டாண்டிங் ஆக இருந்தது என்று குறிப்பிட்டிருக்கிறார். இப்படி குஷ்பு பதிவிட்ட பதிவு சோசியல் மீடியாவில் வைரலானது தொடர்ந்து பலரும் ஊர்வசிக்கு ஆதரவாக கமெண்ட் போட்டு வருகின்றனர்.

Advertisement