அனந்தித்தாவை தொடர்ந்து உடல் எடையை குறித்துள்ள அவந்திகா. கலக்கும் குஷ்பூவின் மகள்கள்.

0
155464
kushboo
- Advertisement -

தென்னிந்திய சினிமா திரை உலகில் உள்ள முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகை குஷ்பூ. உண்மையிலேயே குஷ்புவின் இயற்பெயர் நக்கர்த் கான் ஆகும். இவர் திரைப்பட நடிகை மட்டுமல்லாமல் அரசியல்வாதியும் ஆவார். இவர் சினிமா திரை உலகில் 1980களில் வெளி வந்த படங்களில் குழந்தை நட்சத்திரமாக தான் முதலில் அறிமுகமானார். பின் 1989 ஆம் ஆண்டு ‘வருஷம் 16’ என்ற தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படமே அவருடைய முதல் படமாகும். பின்னர் நடிகை குஷ்பூ 90 களில் உள்ள தமிழ் திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாகவும் விளங்கியுள்ளார்.

-விளம்பரம்-
View this post on Instagram

#khushbusundar Daughter Ananditha Latest Clicks

A post shared by Behind Talkies (@behindtalkies) on

சினிமா உலகில் 90 களின் காலகட்டத்தில் இளைஞர்களின் கனவுக் கன்னியாக திகழ்ந்தவர் நடிகை குஷ்பு. மேலும், ரசிகர்கள் குஷ்பு மீது உள்ள பற்றின் காரணமாக அவருக்கு கோவில் ஒன்று கட்டி உள்ளார்கள். தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற பல மொழி படங்களில் நடித்துள் குஷ்பூ படங்களில் குணச்சித்திர வேடங்களிளும்,சின்னத்திரையிலும் நடித்து வருகிறார். குஷ்பு கடந்த 2000ஆம் ஆண்டு சினிமா துறையில் பிரபலமான இயக்குனர் சுந்தர்.சியும், குஷ்பூவும் திருமணம் செய்து கொண்டார்கள்.

இதையும் பாருங்க : ஹீரோவாவதற்கு முன்பாகவே ஸ்ரீகாந்த் படத்தில் பேராசிரியராக நடித்துள்ள விஜய் ஆண்டனி.

- Advertisement -

மேலும், இவர்கள் திருமணம் காதல் திருமணம் தான். குஷ்பு மற்றும் சுந்தர் சி தம்பதியருக்கு அவந்திகா, அனந்திதா என்ற இரு மகளும் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் குஷ்புவை போல மிகவும் குயூடாக பப்லியான தோற்றத்தில் தான் இருந்தார்கள். இருப்பினும் இவர்கள் உருவத்தை வைத்து பல முறை பலரும் கேலி கிண்டல்களை செய்தார்கள். அவ்வாரான கிண்டல்களுக்கு குஷ்புவும் பல முறை பதிலடி கொடுத்துள்ளார்.

குஷ்பூவின் மகள்களின் உருவத்தை கேலி செய்து வந்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் சமீபத்தில் குஷ்புவின் மகள் அனந்திதா உடல் எடையை குறைத்து படு ஸ்லிம்மாக மாறிய இருந்தார். அந்த புகைப்படங்கள் வலைதளத்தில் வைரலாக பரவியது. இந்த நிலையில் இன்று (மே 3) குஷ்புவின் தாயார் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

-விளம்பரம்-

இதற்காக நடிகை குஷ்பூ, இரவு 12 மணிக்கு தனது தாய்க்கு தனது மகளுடன் பிறந்தநாள் வாழ்த்தை கூறியுள்ளார். அந்த புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் குஷ்பூ. அதில் குஷ்பூவின் மற்றொரு மகளான அவந்திகா முன்பை விட உடல் எடையை குறைத்து படு ஸ்லிம்மாக தோற்றமளிக்கிறார்.

Advertisement