ஹீரோவாவதற்கு முன்பாகவே ஸ்ரீகாந்த் படத்தில் பேராசிரியராக நடித்துள்ள விஜய் ஆண்டனி.

0
6077
vijayantony
- Advertisement -

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர்களாக இருந்து பின்னர் ஹீரோவாக மாறியவர்கள் பல பேர் இருக்கின்றனர். அதில் இளைய தலைமுறையில் சொல்ல வேண்டும் என்றால், ஹிப் ஹாப் ஆதி, ஜி வி பிரகாஷ் என்று இப்படி சொல்லிகொண்டே போகலாம். ஆனால், இவர்கள் இருவருக்கும் சீனியர் என்றால் அது விஜய் ஆண்டனி தான். ஹாரிஸ் ஜெயராஜுக்கு பின்னர் தனது பாடல்களில் புரியாத வரிகளை வைத்து அதை ஹிட் ஆக்கியவர் விஜய் ஆண்டனி தான். தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக கலக்கி கொண்டு வருகிறார்.

-விளம்பரம்-

விஜய் ஆண்டனி இசையமைப்பாளராக அறிமுகமானது, கடந்த 2005 ஆம் ஆண்டு ரவி கிருஷ்ணா நடிப்பில் வெளியான ‘சுக்ரன்’ படத்தின் மூலம் தான். அந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அந்த படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி அடுத்தடுத்து படங்களுக்கு இசையமைத்தார்.

இதையும் பாருங்க : ஏன் இப்படி எலும்பா ஆகீடீங்க – ரைசாவின் புகைப்படத்தை கண்டு ஷாக்கான ரசிகர்கள்.

- Advertisement -

மேலும், விஜய் ஆண்டனி இசையமைப்பாளராக இருந்த போதே சினிமாவிலும் தோன்றியுள்ளார். பலரும் இவர் திரையில் தோன்றியது, இவர் இசையமைத்த TN 07 AL 4777 என்ற படத்தில் இடம்பெற்ற ‘ஆத்தி சூடி’ என்ற பாடலில் தான் என்று பலரும் நினைத்திருப்பீர்கள். ஆனால், அதற்கு முன்பாகவே இவர் நடிகராக அறிமுகமாகியுள்ளார்.

ஆம், கடந்த 2006 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் மற்றும் பாவனா நடிப்பில் வெளியான ‘கிழக்கு கடற்கரைசாலை’ என்ற படத்தில் விஜய் ஆண்டனி ஒரு சிறு கதாபாத்திரத்தில் தோன்றியுள்ளார். இந்த படத்தில் விஜய் ஆண்டனி, ஒரு கல்லூரி பேராசிரியர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த படத்திற்கு பின்னர் தான் விஜய் ஆண்டனி TN 07 AL 4777 பட பாடலில் தோன்றியிருந்தார். மேலும், நான் படத்தின் மூலம் ஹீரோவாக களமிறங்கிய விஜய் ஆண்டனி அடுத்தடுத்து படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். தற்போது 6 படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

Advertisement