வெளிநாட்டில் படிப்பு, உடல் எடை குறைப்பு – வேற லெவலில் இருக்கும் குஷ்பூவின் மகள் சினிமாவில் அறிமுகம். குஷ்பூ போட்டுள்ள கண்டிஷன்.

0
1766
kushboo
- Advertisement -

பாலிவுட்டை போல தமிழ் சினிமாவிலும் எத்தனையோ வாரிசு நடிகர், நடிகைகள் இருக்கின்றனர். அந்த வகையில் குஷ்பூவின் மகளும் தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார். தென்னிந்திய சினிமா திரை உலகில் உள்ள முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகை குஷ்பூ. உண்மையிலேயே குஷ்புவின் இயற்பெயர் நக்கர்த் கான் ஆகும். இவர் திரைப்பட நடிகை மட்டுமல்லாமல் அரசியல்வாதியும் ஆவார். இவர் சினிமா திரை உலகில் 1980களில் வெளி வந்த படங்களில் குழந்தை நட்சத்திரமாக தான் முதலில் அறிமுகமானார். பின் 1989 ஆம் ஆண்டு ‘வருஷம் 16’ என்ற தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படமே அவருடைய முதல் படமாகும். பின்னர் நடிகை குஷ்பூ 90 களில் உள்ள தமிழ் திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாகவும் விளங்கியுள்ளார்.

-விளம்பரம்-

சினிமா உலகில் 90 களின் காலகட்டத்தில் இளைஞர்களின் கனவுக் கன்னியாக திகழ்ந்தவர் நடிகை குஷ்பு. மேலும், ரசிகர்கள் குஷ்பு மீது உள்ள பற்றின் காரணமாக அவருக்கு கோவில் ஒன்று கட்டி உள்ளார்கள். தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற பல மொழி படங்களில் நடித்துள் குஷ்பூ படங்களில் குணச்சித்திர வேடங்களிளும்,சின்னத்திரையிலும் நடித்து வருகிறார். குஷ்பு கடந்த 2000ஆம் ஆண்டு சினிமா துறையில் பிரபலமான இயக்குனர் சுந்தர்.சியும், குஷ்பூவும் திருமணம் செய்து கொண்டார்கள்.

இதையும் பாருங்க : குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சியால் ஒரு பெண் கர்ப்பமானார் – குக்கு வித் கோமாளி பத் பேச்சு. ரசிகர்களின் Reaction.

- Advertisement -

உடல் கேலிக்கு உள்ளான மகள் :

மேலும், இவர்கள் திருமணம் காதல் திருமணம் தான். குஷ்பு மற்றும் சுந்தர் சி தம்பதியருக்கு அவந்திகா, அனந்திதா என்ற இரு மகளும் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் குஷ்புவை போல மிகவும் குயூடாக பப்லியான தோற்றத்தில் தான் இருந்தார்கள். இருப்பினும் இவர்கள் உருவத்தை வைத்து பல முறை பலரும் கேலி கிண்டல்களை செய்தார்கள். அவ்வாரான கிண்டல்களுக்கு குஷ்புவும் பல முறை பதிலடி கொடுத்துள்ளார்.

உடல் எடை குறைத்த மகள்கள் :

குஷ்பூவின் மகள்களின் உருவத்தை கேலி செய்து வந்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் சமீபத்தில் குஷ்புவின் மகள் அனந்திதா உடல் எடையை குறைத்து படு ஸ்லிம்மாக மாறிய இருந்தார். அந்த புகைப்படங்கள் வலைதளத்தில் வைரலாக பரவியது. அதே போல குஷ்பூவின் மற்றொரு மகளான அவந்திகாவும் உடல் எடையை குறைத்து இருந்தார். இவர்கள் இருவருக்கும் போட்டி போடும் வகையில் குஷ்பூவும் உடல் எடையை குறைத்தார்.

-விளம்பரம்-

சினிமாவில் அறிமுகமாகும் மகள் :

இப்படி ஒரு நிலையில் குஷ்பூவின் மகள் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார். அது வேறு யாரும் இல்லை. குஷ்பூவின் மூத்த மகளான அவந்திகா தான் சினிமாவில் களமிறங்க இருக்கிறார். அவந்திகா லண்டனில்  நடிப்பு பயிற்சி பள்ளியில் தனது படிப்பை முடித்த நிலையில் தற்போது அவர் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார். இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் குஷ்பூ பதிவிட்டுள்ளதாவது : –

குஷ்பூ போட்ட கண்டிஷன் :

என்னோட மூத்த மகள் லண்டனில் உள்ள சிறந்த நடிப்பு பயிற்சி பள்ளியில் தனது படிப்பை முடித்துவிட்டார். அடுத்ததாக அவர் சினிமாவில் தனது பயணத்தை தொடங்கவுள்ளார். ஆனால், அவரை நாங்கள் அறிமுகமோ அல்லது பரிந்துரையோ செய்யப்போவதில்லை. நீங்கள் அவரை வாழ்த்த வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.இதையடுத்து, குஷ்பூவை பாலோ செய்யும் ரசிகர்கள், குஷ்புவை போலவே அவரது மகள் அவந்திகாவும் சினிமாவில் புகழ் பெற வேண்டும் என்று வாழ்த்தி வருகிறார்கள்.


Advertisement