சுசுபு ஆண்டி இன்னும் விக் வைக்கிறீங்களா ? கிண்டல் செய்தவருக்கு குஷ்பூ கொடுத்த பதிலடி.

0
3310
kushboo
- Advertisement -

தமிழ் சினிமாவில் பல கதாநாயகிகள் வந்து போனாலும் இன்றளவும் நமது மனதில் நீங்காத இடம்பிடித்திருக்கும் நடிக்க என்றால் அது குஷ்பு தான் .நடிகைக்கு கோவில் கட்டினார்கள் என்றால் அந்த பெருமையும் குஷ்புவிற்கு தான் சேரும் .தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த குஷ்பு சில ஆண்டுகளாக பல சர்ச்சைகலில் சிக்கியுள்ளார்.ர். இவர் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற பல மொழி படங்களில் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

தற்போது குஷ்பூ அவர்கள் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். காங்கிரஸ் கட்சியின் பிரமுகரான இவர் தனது த்விட்டேர் பக்கத்தில் மோடி மீதும் ,பா.ஜா.கா மீதும் தொடர்ந்து பல குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். இதனால் பல பா.ஜா.கா பிரமுகர்களின் வெறுப்பை சம்பாதித்து வருகிறார் குஷ்பு. அதே போல மோடியை கூட அடிக்கடி விமர்சித்து வருகிறார்.

- Advertisement -

இந்த நிலையில் நடிகை குஷ்பூ சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்தும், சமீபத்தில் உணவில்லாமல் இழந்த ஒரு குழந்தையின் அம்மாகுறித்தும் பேசி இருந்தார். அதில், நாட்டின் குடிமக்களை தங்கள் வீட்டை அடைய போராடும் புலம்பெயர்ந்தோர் சார்பாக பேசுமாறு கேட்டுக்கொண்டார். தனது தந்தையை ஒரு சைக்கிளில் சுமந்துகொண்டு, தனது வீட்டை அடைய 1200 கி.மீ தூரம் சென்ற 12 வயது டீன் ஏஜ் பெண் எதிர்கொள்ளும் போராட்டத்தை குறித்து பேசி இருந்தார்.

மேலும் , ஒரு குழந்தை தனது மறைவைப் பற்றி அறியாமல் தனது தாயின் படுக்கை விரிப்புடன் எப்படி விளையாடியது என்பதையும் விளக்கினார். நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோர் அவர்கள் எங்கு செல்கிறார்கள் என்று தெரியாமல் ரயிலில் பயணிக்கிறார்கள் என்பதை பற்றியும் பேசி இருந்தார் குஷ்பூ. வழக்கம் போல குஷ்புவின் இந்த பதிவு சில விமர்சனகளுக்கு உள்ளது.

-விளம்பரம்-

இந்த பதிவை கண்ட நபர் ஒருவர், சுசுபூ ஆண்டி இன்னும் விக் பயன்படுத்துறீங்களா ? என்று கிண்டலத்து ஒரு புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த குஷ்பூ இந்த முட்டாள் பீசு எங்கிருந்து வந்தது? தலையில்லா முண்டமே தைரியமாக உன்னுடைய முகத்தையும் உன்னுடைய நிஜ பெயரையும் உலகிற்கு காட்ட முடியுமா கோழையே, நீ என்னுடைய தலை முடியை பார்த்து மிகவும் பொறாமைப்படுகிறாய் என்பது மட்டும் எனக்கு புரிந்து விட்டது என்று கூறியுள்ளார்.

மேலும், மற்றொரு நபர், புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி குஷ்பு பேசியது எனக்கு கண்ணீர் வரவைத்தது. ஆனால், இத்தகைய சூழலில் குஷ்பு போன்ற நபர்கள் தங்களுடைய கருத்தை தெரிவிக்கும் போது தனது உள்ளத்திலிருந்து உண்மையாக தெரிவிக்க வேண்டும். உங்களுடைய உடை மற்றும் மேக்கப் எல்லாம் பார்க்கும்போது கேவலமான அரசியல் என்றுதான் தெரிகிறது என்று பதிவிட்டுள்ளார். இதற்கு பதில் அளித்த குஷ்பு உன் கண்களை முதலில் பரிசோதனை செய்துகொள் நான் எந்த ஒரு மேக்கப்பும் போடவில்லை. அதேபோல இது போன்ற விஷயங்களை பேசும்போது அழுக்காகவும் கிழிந்த துணிவுடனும் அமர்ந்து வரவேண்டுமா என்ன? என்று மறுத்துள்ளார்

Advertisement